நீதிமன்றமானது எந்தவொரு அரசியல் சண்டைகளுக்குமான இடமல்ல என்று கூறிய நீதிபதிகள், மனுதாரருக்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து, அந்த அபராதத் தொகையினை தமிழ்நாடு அரசுக்கு செலுத்தவும், தமிழ்நாடு அரசானது அந்த தொகையினை மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மற்றும் அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களின் விளம்பரங்களில் மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர்களின் படங்களை பயன்படுத்துவதற்கு ஆட்சேபனை தெரிவித்து, தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் – திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராகவும் அதிமுக-வின் திரு.சி.வி.சண்முகம் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த...