] K. Chandru Former Judge Of Highcourt: காணொளி மூலம் மட்டுமே நீதிமன்றங்கள் இயங்குவதால் வெள்ளைச்சீருடை கண்ணை கூச வைக்கும்.ஒளி அதன் மீது பட்டு திரும்பும் போது கண்ணை கூச வைக்கும்.(glare).எந்த ஒளிப்பதிவாளரைக்கேட்டாலும் கூறுவார்.தொலைகாட்சிகளில் நிகழ்ச்சிப் பதிவின் போது கூட அழுத்தமான கலர் இடையில்தான் வரச்சொல்லுவார்கள்!! எனவே பார்கவுன்சில் தனது முடிவைப் மீள் பரிசீலிக்கலாம்!!
பதிவின் போது கூட அழுத்தமான கலர் இடையில்தான் வரச்சொல்லுவார்கள்!!
எனவே பார்கவுன்சில் தனது முடிவைப் மீள் பரிசீலிக்கலாம்!!
[5/14, 18:47] Sekarreporter 1: 🍁
[5/14, 18:57] K. Chandru Former Judge Of Highcourt: நமக்கு கருப்பு கோட்டு ,கவுன் வழங்கிய ஆங்கிலேயர்களே மாறிவிட்டார்கள்.லண்டனில் புதிய உச்சநீதிமன்றம் ஏற்படுத்திய பின் அங்குள்ள நீதிபதிகள் இந்த சீருடையை தூக்கி எறிந்து விட்டு ஒரு உடை வடிவமைப்பு நிபுணரை கலந்தாலோசித்து புதிய டிசைன் கோட்டு ,சூட்டு அணிந்து தான் நீதிபரிபாலனம் செய்கின்றனர்.
எனவே பார் கவுன்சில் கொரானா காலத்திற்கு பின்னரும் புதிய சீருடைக்கு தாவலாம்!!
நான் பல வருடமாக கோரி வரும் கோரிக்கை!
இது தவிர்க்கப்பட்டு வந்தாலும் தற்போழுது “கொரானா அம்மன்”நமது விழிகளை திறந்துள்ளார்.நாம் இப்பூவுலகை புதிதாக நோக்க முனையலாம்.
இதற்கு நீதிபதிகள் அனுமதியோ (அ)ஆதரவோ தேவையில்லை!1961ம் வருடத்திய வழக்கறிஞர் சட்டம் பார் கவுன்சிலுக்கு முழு அதிகாரம் கொடுத்துள்ளது!!
யோசிப்பார்களா??
[5/14, 19:00] Sekarreporter 1: 🍁🍁