Pocso 20 years jail chennai court

மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த, பள்ளி வேன் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா, விசுர் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியராஜ் என்பவர், சென்னையில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு இவரது வேனில் சென்ற மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் பதிவு செய்த. வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம், சத்தியராஜ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com