Daily Archive: January 15, 2023
நீதிபதிகள் வேலுமணி, ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சேவல் சண்டையின் போது சூதாட்டம் நடத்தப்பட மாட்டாது; சேவல்கள் துன்புறுத்தப்பட மாட்டாது என உறுதி அளித்தால், சேவல் சண்டைக்கு அனுமதிக்கோரிய மனுக்கள் பரிசீலிக்கப்படும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சேவல்களை துன்புறுத்தக்கூடாது, போட்டி நடைபெறும் இடத்தில் ஒரு கால்நடை மருத்துவர் இருக்க வேண்டும், சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது, சேவலுக்கு மது கொடுக்க கூடாது, காலில் கத்தி கட்டக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், குறிப்பிட்ட சமூதகத்தை பெருமைப்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மற்றும் திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி ஈரோடு மாவட்டம், பெரியவடமலைபாளையத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதிக்க கோரியும், மறைந்த முதல்வர்...
நீதிபதி சந்திரசேகரன், பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பது குற்றமல்ல என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, பிரபாகரனின் பிறந்த நாளை ஒட்டி நடத்தப்படும் பேச்சுப்போட்டியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ, அதன் தலைவரையோ புகழ்ந்து பேசக் கூடாது என்ற நிபந்தனை முறையற்றது எனக் கூறி, அந்த நிபந்தனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 68வது பிறந்த நாளை ஒட்டி கல்லூரி மாணவ – மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த போட்டியில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 68...
சென்னையிலிருந்து புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்களை இணைக்கும் கிழக்கு கடற்கரை சாலையை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் முழுமையாக புறக்கணித்து விட்டதாகக் கூறி, மயிலாடுதுறையை சேர்ந்த பா்ஜ்க் வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையை சீரமைக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசு மற்றும் புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையிலிருந்து புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்களை இணைக்கும் கிழக்கு கடற்கரை சாலையை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் முழுமையாக புறக்கணித்து விட்டதாகக்...