ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி திரு என் பால் வசந்தகுமார் அவர்கள் தலைமையில் ஓர் குழு அமைத்து மேற்கூறிய நிறுவனம் அதை சார்ந்த மற்ற நிறுவனங்களின் சொத்துக்களை விற்பனை செய்து முதலீட்டாளர்களுக்கு முழுமையாகவோ, விகிதாச்சார முறை
[25/11, 13:14] Sekarreporter: Justice N Paul Vasantha Kumar
[25/11, 13:14] Sekarreporter: மதுரை பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சிசி நம்பர் 09 of 2019 வழக்குக்கு ரூபாய் 274 கோடியே 11 லட்சம் அனுப்பப்பட்டுள்ளது.
மதுரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த “டிஸ்க் அஸெட் லீட் இந்தியா லிமிடெட்” என்ற நிறுவனம் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களிடமிருந்து முதலீடு வாங்கி முதலீட்டு தொகையை திருப்பி தராமையால் ஒரு சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு 8084 / 2017 தாக்கல் செய்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு 11.10.2017 அன்று ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி திரு என் பால் வசந்தகுமார் அவர்கள் தலைமையில் ஓர் குழு அமைத்து மேற்கூறிய நிறுவனம் அதை சார்ந்த மற்ற நிறுவனங்களின் சொத்துக்களை விற்பனை செய்து முதலீட்டாளர்களுக்கு முழுமையாகவோ, விகிதாச்சார முறை அடிப்படையிலோ முதலீட்டாளர்களின் பணத்தை திரும்ப வழங்க ஆணையிட்டது. மேற்கூறிய நிறுவனம் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்களின் பல சொத்துக்களை உயர் நீதிமன்றத்தில் அவ்வப்போது உத்தரவு பெற்று விற்பனை செய்து அந்த தொகையை இந்தியன் வங்கியின் உயர் நீதிமன்ற கிளையில் டெபாசிட் செய்யப்பட்டது. முதலீட்டாளர்கள் எண்ணிக்கையில் பெரும் வேறுபாடு காணப்பட்டதால் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவால் முதலீட்டாளர்களின் விகிதாச்சார அடிப்படை தொகையை திரும்ப வழங்க இயலா நிலை ஏற்பட்டது. எனவே குழுவின் தலைவர், இறுதி அறிக்கை தாக்கல் செய்து மதுரை பொருளாதார குற்ற வழக்குகள் விசாரணை நீதிமன்றத்திற்கு நிலுவையில் உள்ள மனுக்களையும் வங்கியில் உள்ள முழு தொகையையும் அனுப்பி வைக்க வேண்டியதன் அடிப்படையில் 27.10.2025 அன்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அவ் ஆணையின்படி குழுவிடமிருந்து சகல ஆவணங்களையும் திரு. ராஜா முரளி, டி.எஸ்.பி. இ.ஓ.டபிள்யு-2 (EOW-II) மதுரை, அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
மேலும் வங்கியில் டெபாசிட் கணக்கில் வட்டியுடன் இருந்த ரூபாய் 274, 11,13,442.70 தொகையை உயர்நீதிமன்ற உத்தரவின்படி மதுரை பொருளாதார குற்ற வழக்கு நிலுவையில் உள்ள சிசி நம்பர் 09/2009 க்கு பாரத ஸ்டேட் வங்கியின் கணக்கில் செலுத்தப்பட்டது.
முதலீட்டாளர்கள், முதலீட்டு தொகையை திரும்பப் பெறுவது சம்பந்தமாக மதுரை பொருளாதார குற்ற வழக்கு நீதிமன்றத்தை அணுகவும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.