South indian film general.body meeting stayed by mhc judge velmurugan

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் ஆண்டு பொதுக் குழுவை கூட்ட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் உறுப்பினரான கிஷோர்குமார் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கான தேர்தல் உரிய விதிகளை பின்பற்றி நடத்தப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தேர்தலில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டிய நிலையில் அதற்கு அவகாசம் அளிக்காமல் அவசர, அவசரமாக தேரதல் நடத்தப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது

தேர்தலை முறையாக நடத்தாத நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றதாக கூறப்படும் உறுப்பினர்களை வைத்து பொதுக்குழுவை கூட்ட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

எனவே பொதுக்குழுவு நடத்த தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன் இன்று தீர்ப்பளித்தார். அதில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் 77வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை கூட்ட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

You may also like...