Acj bench ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை நகரில் போக்குவரத்தை சரிசெய்வதற்கு நவீன சென்சார் அடிப்படையிலான கருவிகளை பொருத்துவது தொடர்பான டெண்டரை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை நகரில் போக்குவரத்தை சரிசெய்வதற்கு நவீன சென்சார் அடிப்படையிலான கருவிகளை பொருத்துவது தொடர்பான டெண்டரை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதியுதவி மூலம் சென்னை நகரில் போக்குவரத்தை சரி செய்ய, வாகனங்களின் நெருக்கத்தின் அடிப்படையில் சிக்னல்கள் இயங்கும் வகையிலான சென்சார் அடிப்படையிலான கருவிகளை பொருத்துவது தொடர்பாக 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் டெண்டர் கோரப்பட்டது.

இந்த டெண்டரை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் நதியழகன், உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், டெண்டர் படிவங்களைப் பெற 75 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும், 10 கோடி ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளால் பல ஒப்பந்ததாரர்கள் டெண்டரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகள் காரணமாக இரண்டு நிறுவனங்கள் மட்டுமே டெண்டர் படிவங்களை சமர்ப்பித்த நிலையில், ஒரு நிறுவனம், கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதால், எல் அண்ட் டி நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதலில் 650 கோடி ரூபாய்க்கு திட்டம் செயல்படுத்த முடிவெடுத்த நிலையில், இத்தொகையை 904 கோடி ரூபாயாக உயர்த்தியதாகவும், பின், 436 கோடி ரூபாய்க்கு மட்டுமே டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், டெண்டரை ரத்து செய்து புதிதாக டெண்டர் கோர உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, டெண்டர் தொகையை 904 கோடி ரூபாயாக உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

You may also like...