Madras High Court’s Division Bench overturned a single judge’s order to conduct additional counselling for 40 vacant ‘Super Specialty’ medical seats in Tamil Nadu.

[14/02, 07:19] Sekarreporter: தமிழக மருத்துவ கல்லுாரிகளில் காலியாக உள்ள, 40 ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவ படிப்புகளுக்கான இடங்களுக்கு, கூடுதல் கலந்தாய்வு நடத்த, மருத்துவ கவுன்சிலிங் குழுவுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

நாடு முழுதும் அரசு, தனியார், நிகர்நிலை பல்கலைகளில் உள்ள, ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவ படிப்புகளுக்கு, 2024 -25ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இரண்டு கட்டங்களாக கவுன்சிலிங் நடத்தப்பட்டது.

கவுன்சிலிங்கிற்கு பின், நாடு முழுதும் உள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களில் உள்ள 5,000 இடங்களில், 600 இடங்கள் காலியாக உள்ளன.

கவுன்சிலிங்கில் தேர்வானவர்கள், படிப்பில் சேராமல் கைவிட்ட காரணத்தால், இந்த காலியிடங்கள் ஏற்பட்டு உள்ளதாகவும், இந்த இடங்களுக்கு கூடுதல் கவுன்சிலிங் நடத்த உத்தரவிட கோரியும், தமிழகத்தை சேர்ந்த டாக்டர்கள் அஜிதா, பிரீத்தி, நவநீதம் ஆகியோர் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.கே.இளந்திரையன், தமிழகத்தில் காலியாக உள்ள, 40 மருத்துவ படிப்பு இடங்களுக்கும், நான்கு வாரங்களில் கூடுதல் கவுன்சிலிங் நடத்த, மத்திய மருத்துவ கவுன்சிலிங் குழுவுக்கு உத்தரவிட்டிருந்தார்.

தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து மருத்துவ கவுன்சில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி
ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள் முருகன் அமர்வு, ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் மருத்துவ மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என, காலக்கெடு விதித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டி, தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
[14/02, 07:19] Meta AI: 😊 Key points:

– Madras High Court’s Division Bench overturned a single judge’s order to conduct additional counselling for 40 vacant ‘Super Specialty’ medical seats in Tamil Nadu.
– The seats were vacant due to students not joining after being selected in the counselling process.
– The Supreme Court had directed medical admissions to be completed by August 31st.
– The single judge’s order was deemed to be violating student admission rules and was quashed.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com