கலைகமகள் சபா சிறப்பு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஸ், செந்தில்குமார்

கலைமகள்  சபா மீது நிதி நிறுவன  மோசடி வழக்கு  பதிவு செய்யப்பட்டு  வழக்கு விசாணை நடந்து வருகிறது. இந்த நிதி நிறுவனம்  குறித்து விசாரணை நடத்தி முதலீட்டாளர்களுக்கு  பணத்தை திரும்ப தர  தமிழக அரசின் பதிவாளர் ஜெனரலுக்கு  ஐகோர்ட் உத்தரவிட்டது.  இதை தொடர்ந்து பதிவாளர் ஜெனரல்  கலைமகள் சபாவுக்கு உள்ள நிலங்கள் குறித்து விசாரணை நடத்தினார். கலைமகள் சபா  விவகாரத்தில் பதிவாளர் ஜெனரல்  ஜெனரல் விசாரணை நடத்தினால் சரியாக இருக்காது ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் கலைமகள் சபா சார்பாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஸ், செந்தில்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, முதலீட்டாளர்கள் சார்பாக மூத்த வக்கீல் சிங்காரவேலன், வக்கீல்கள் கமல்நாதன், சின்னதுரை  ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி, வழக்கு நிலுவையில் இருக்கும் போது, ஐஜி கலை மகள் சபா நிதி நிறுவன முதலீட்டாளர்கள் செலுத்திய பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிட்டு சிலருக்கு பணத்தை  திரும்ப கொடுத்துள்ளார். தற்போது நிலத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது,. கலை மகள் சபா நிலம்  எவ்வளவு உள்ளது என்ற விவரம்  சேகரித்து அறிக்கை அளிக்க 33 மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டும்  எந்த முன்னேற்றமும் எடுக்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது ஐஜி நடவடிக்கை தவறானது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றனர்.

இதை கேட்ட நீதிபதிகள் கலைமகள் சபா முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப தர  ஐஜிக்கு தடை விதித்து   இந்த வழக்கு விசாரணையை  வருகிற 1ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். 

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com