விமானத்தில் அறிவிக்கப்படும் அறிவிப்புகள் இந்தி ஆங்கிலம் தவிர்த்து மாநில மொழிகளில் அறிவிக்க கோரி

விமானத்தில் அறிவிக்கப்படும் அறிவிப்புகள் இந்தி ஆங்கிலம் தவிர்த்து மாநில மொழிகளில் அறிவிக்க கோரி

விமானத்தில் பயணிகள் ஏறிய பிறகு அவசர காலக்கட்டங்களில் விமானத்தில் பயணிகள் எவ்வாறு செயல்பட வேண்டும்,அவசரமான தருணத்தில் விமானத்தில் இருந்து தப்பிக்க அவசர வழி எங்கிருக்கிறது, ஆக்ஸிஜன் குறைபாட்டால் மூச்சுத் திணறல் ஏற்பட்டால் தற்காலிக ஆக்சிஜன் முகக் கவசம் பயன்படுத்தும் முறைகள், சீட் பெல்ட் அணியும் முறைகள், நீர் நிலைகளில் விழுந்தால் தப்பிக்க விமானத்தில் அதற்கான பிரத்யோக ஆடைகள் இருக்கும் இடம் மற்றும் அணியும் முறை குறித்த செயல்முறை விளக்கங்கள் மற்றும் விளக்க கையேடு தற்போது ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே வழங்கப்படுகிறது. நமது நாட்டில் சுமார் 2011 மக்கள் தொகை கணக்கீட்டின் படி 52.83 கோடி (43. 63%) மக்கள் மட்டுமே இந்தி தெரிந்தவர்கள். அதே போல் ஆங்கிலம் தெரிந்தவர்கள் 12.94 கோடி (10.35%) மக்கள் மட்டுமே. கிட்டத்தட்ட 50% மக்கள் இந்தியும் ஆங்கிலமும் தெரியாதவர்கள். மக்கள் பாதுகாப்பு குறித்த இந்த இன்றியமையாத விளக்கங்கள் மக்களுக்கு புரிகிற மொழியில் இருக்க வேண்டும். பெரும்பாலான பயணிகளில் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாதவர்கள் தான். எனவே, பயணிகள் பாதுகாப்பு கருதி, பாதுகாப்பு விளக்க கையேடுகளை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அட்டவணை 8 ல் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், அசாமி, குஜராத்தி, பெங்காலி, காஷ்மீரி, மணிப்பூரி, மராத்தி, கொங்கனி, ஒரியா, பஞ்சாபி, சிந்தி, நேபாளி, சமஸ்கிருதம், உருது, போடோ, மைத்திலி, சந்தாலி,டாகிரி, இந்தி உட்பட ஆங்கிலம் ஆகிய 23 மொழிகளில் வழங்க வேண்டும் எனவும் இந்திய நிறுவனங்களால் நடத்தப்படும் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ் ஜெட், கோ ஏர், இண்டி கோ, ஏர் ஏசியா மற்றும் டாட்டா விஷ்ட்டா ஆகிய விமானங்களில் தற்போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமை பாதுகாப்பு குறித்த செயல்முறை விளக்கங்கள் அறிவிக்கப்படுவதுடன் கூடுதலாக விமானம் புறப்படும் மற்றும் விமானம் சென்றடையும் நகரத்தின் ஆட்சி மொழி எதுவோ அந்த மொழியிலும் பயணிகள் பாதுகாப்பு குறித்த அறிவிப்புகள் அளிக்க கோரி நான் தாக்கல் செய்த வழக்கு WP. No. 19084 of 2021 மாண்புமிகு தலைமை நீதிபதி அமர்வில் வரும் திங்கள்கிழமை 13.09.2021 அன்று வழக்கு பட்டியல் வரிசை எண். 4 ல் விசாரணை.
பா இராம்குமார் ஆதித்தன், உயர்நீதிமன்ற வழக்குரைஞர்

You may also like...