நீதித்துறை மீது நம்பிக்கையில்லா நிலை உள்ளது – நிதியமைச்சர்

ol>
நீதித்துறை மீது நம்பிக்கையில்லா நிலை உள்ளது – நிதியமைச்சர்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் வழக்குரைஞர்களுக்கு சட்டப் புத்தகம் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள பார் கவுன்சில் வளாக கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழக நிதியமைச்சர் டாக்டர். பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
நிதியமைச்சர் டாக்டர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:
நிதி, பொருளாதாரம் என்பது ரகசிய சூத்திரம் கிடையாது. நிர்வாகத்தையும், சட்ட ஒழுங்கையும் பொது நிர்வாகம், சட்ட ஆட்சி, நல்ல நிறுவனம், திறமையான சந்தை, வெளிப்படையான சந்தை ஆகியவை நடந்தால் இயற்கையாகப் பொருளாதாரம் வளரும். அரசின் நிதிப் பெருகுவதோடு, சமுதாயம் முன்னேறும்.
ஆனால் வேறு எந்தவொரு ரகசிய சூத்திரமும் இல்லாமல் முதல்வரின் வழிகாட்டுதல்படி கடந்த 10 மாதங்களாக நிர்வாகத்தை சீர்திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் சில நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதாவது மாநிலத்தின் பொருளாதாரம், நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டு வர முடிந்துள்ளது. தொடர்ந்து அதை தக்க வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். மாநில அரசின் கையில் இருக்கும் அதிகாரங்களை கொண்டும், முதல்வரின் வழிகாட்டுதல் படியும் சில நல்ல மாற்றங்களை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதை செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம்.
நீதித்துறை நல்லா வளர வேண்டும். ஆனால் தற்போது இந்தியாவில் அது முற்றிலும் நம்பிக்கையில்லாததாக உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் தலைமை நீதிபதி (சஞ்சிப் பானர்ஜி) இங்கே பதவியில் இருந்தபோது, அவர் என்னை சந்திக்க வேண்டுமென்று கூறினார்.
ஆனால் அப்போது அவரை சந்தித்திருந்தால் அரசியல் காரணங்களால் ஏதேனும் சிக்கல்கள் வருமோ என தயங்கி சந்திக்கவில்லை. அதற்குள் அவரை வேறு மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன் பின்னர் அவரே நேரில் சென்று சந்தித்தேன். அப்போது நீதித்துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய பட்டியலை என்னிடம் வழங்கினார்.
அப்போது அவரிடம் கட்டாயம் செய்து முடிப்போம். ஆனால் அதற்கு முழு ஒத்துழைப்பு வேண்டுமென தெரிவித்தேன்.
அவரிடம் கூறியது போல் நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் போது ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.

ol>
தமிழகம் முழுவதும் உள்ள 322 மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்களில் 3 ஆயிரத்து 524 கோடி ரூபாய் நிரந்தர வைப்பீடுகள் உள்ளது எனத் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்ட சென்னை உயர் நீதிமன்றம்,

தமிழகம் முழுவதும் உள்ள 322 மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்களில் 3 ஆயிரத்து 524 கோடி ரூபாய் நிரந்தர வைப்பீடுகள் உள்ளது எனத் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்ட சென்னை உயர் நீதிமன்றம்,

You may also like...