ஜாய் கிரிசில்டா தனது வழக்கறிஞரான நாடாளுமன்ற உறுப்பினர் சுதா உடனே நேற்று சேப்பாக்கம் பகுதியில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் தலைவர் குமாரியை சந்தித்து, வழக்கறிஞரும் எம்பியுமான சுதா உடன் புகார் ஒன்று அளித்தார்.

மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார் மாநில மகளிர் ஆணையத்தில் ஜாய் கிரிசில்டா புகார்
மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார் மாநில மகளிர் ஆணையத்தில் ஜாய் கிரிசில்டா புகார்
சென்னை: சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா மாநில மகளிர் ஆணையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். கோவை சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, குழந்தை கொடுத்துவிட்டு ஏமாற்றியதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸ்டில்லா கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் மீது விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் அருண் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் வனிதா விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

அதன்படி, துணை கமிஷனர் வனிதா கடந்த மாதம் புகாரின் மீது ஜாய் கிரிஸ்டில்லாவிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தார். அப்போது ஜாய் கிரிஸ்டில்லா, மாதம்பட்டி ராங்கராஜுடன் ஒன்றாக இருந்த புகைப்படங்கள் மற்றும் இருவரும் தேனிலவுக்கு வெளிநாடுகள் சென்ற புகைப்படங்கள் அனைத்தும் ஆவணங்கள் மற்றும் எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா என்றும், 3 முறை கருக்கலைப்பு செய்ததற்கான ஆவணங்களை துணை கமிஷனரிடம் கொடுத்திருந்தார்.

அதன்படி துணை கமிஷனர் மாதம்பட்டி ரங்கராஜனிடம் விசாரணை நடத்தினார். மேலும், இவருவரின் வழக்கும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதேநேரம் மாதம்பட்டி ரங்கராஜிடம் சில ஆவணங்களை விசாரணை அதிகாரி கேட்டிருந்தார். இருவரின் மீதான விசாரணை நடந்து வரும் நிலையில், ஜாய் கிரிசில்டா தனது வழக்கறிஞரான நாடாளுமன்ற உறுப்பினர் சுதா உடனே நேற்று சேப்பாக்கம் பகுதியில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் தலைவர் குமாரியை சந்தித்து, வழக்கறிஞரும் எம்பியுமான சுதா உடன் புகார் ஒன்று அளித்தார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com