Svnj தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விக்கு இந்தியில் பதிலளித்ததை எதிர்த்த வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விக்கு இந்தியில் பதிலளித்ததை எதிர்த்த வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச்சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஞானசேகரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் புதுவையில் நியமன எம்எல்ஏக்கள் தொடர்பான தகவல்களை மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டிருந்ததாகவும், அதற்கு உள்துறை அமைச்சகம் இந்தியில் பதிலளித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

தனக்கு அந்த மொழி தெரியாது என்றும் தனக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே தெரியும் என்பதால், இந்தியில் பதிலளித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், தனக்கு தெரிந்த மொழியில் மட்டுமே பதில் அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கு ஆவணங்களை பார்த்த நீதிபதி வைத்தியநாதன், தனக்கும் இந்தி தெரியாது என்று தெரிவித்து, மத்திய அரசு ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

You may also like...