N sathiskumar judge / ganabathy festivel கொண்டாடுங்கள்

சென்னை வில்லிவாக்கத்தில் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட இந்து மக்கள் கட்சிக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ஹரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், வில்லிவாக்கம் ஒத்தவாடி தெருவில் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்கோரி காவல்துறையிடம் விண்ணப்பித்ததாக கூறியுள்ளார். இதுவரை தமது கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன் அனுமதிக்கோரும் இடம் மிகவும் குறுகலானது எனவும் சிலை வைக்க இடத்தின் உரிமையாளர் அனுமதி கொடுத்துள்ளாரா? என்பது குறித்து தெரியவில்லை எனக்கூறினார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதே இடத்தில் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டதாக கூறினார்.

இதனையடுத்து, சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட இந்து மக்கள் கட்சிக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version