IFS finance case No Ab judge jaya chandren add pp.muniapparaj for police / senior adv Ragavachary NBW எனக்கு தெரியாது / judge இப்ப தெரியுதுதானே சரண்டையவும்
வேலூர் ஐஎஃப்எஸ் நிறுவன மோசடி
வழக்கில் முன் ஜாமீன் கோரி நிறுவனத்தின் இயக்குனர் மோகன் பாபு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், காட்பாடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சர்வீஸ் எனும் ஐஎஃப்எஸ் நிறுவனம், முதலீடு செய்யும் தொகைக்கு, 10 முதல் 25 சதவீதம் வரை மாதந்தோறும் வட்டி தருவதாகக் கூறி, 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ஐஎஃப்எஸ் மார்க் ஆப்பர்சூனிட்டி டெவலப்மென்ட் லிமிடெட் உள்பட ஆறு நிறுவனங்கள் மற்றும் இயக்குநர்கள், நிர்வாகிகள், ஊழியர்களுக்கு எதிராக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த நிறுவனத்தின் இயக்குனர் மோகன்பாபு முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த சில ஆண்டுகளாக தாம் இங்கிலாந்தில் பணியாற்றி வருவதாகவும், இந்த மோசடிக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தவறாக தனது பெயர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், மனுதாரருக்கு எதிராக விசாரணை நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளதாக கூறினார். மேலும், மனுதாரர் இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகாவாச்சாரி, பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது குறித்து எதுவும் தெரியாது என தெரிவித்தார்.
இதனையடுத்து, மனுதாரரை விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.