Ms Ramesh judge Lakshminarayanan judge/ asg Arl sundaresan ed N Ranesh advt அமலாக்கத்துறை உதவி இயக்குனர் விகாஷ் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு
சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் விகாஷ் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்தது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.
உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், ஆகாஷ் பாஸ்கரனிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத் துறை ஆகாஷ் பாஸ்கரனுக்கு சம்மன் அனுப்பியது.
இதையடுத்து, அமலாக்கத் துறைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், நீதிபதி வி.லட்சுமி நாராயணன் அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை உதவி இயக்குனர் விகாஷ் குமார், மேல்முறையீட்டு ஆணைய தலைவர் பிரதீப் குமார் உபாத்தியாயா மற்றும் நிர்வாக பதிவாளர் நஸ்ரின் சித்திக் ஆகியோர் நேரில் ஆஜராகதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மூன்று பேருன் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை உதவி இயக்குனர் விகாஷ் குமார் மட்டும் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இதையடுத்து அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணைய தலைவர் பிரதீப் குமார் உபாத்தியாயா மற்றும் நிர்வாக பதிவாளர் நஸ்ரின் சித்திக் ஆகியோருக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையாததால் அவர்கள் இருவரும் ஆஜராகவில்லை.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை மீறி ஆகாஷ் பாஸ்கரனுக்கு சம்மன் அனுப்பியதற்கு அமலாக்கத்துறை மேல்முறையீடு ஆணைய நிர்வாக பதிவாளர் நஸ்ரின் சித்திக் தான் காரணம் என்பதால் அவர் மட்டும் ஜனவரி 19 ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
…..