Madras high court orders on sep 10

[9/9, 20:31] Sekarreporter1: [9/9, 13:02] Sekarreporter1: The validity of Sec. 10(1)(I) of the NMC Act, 2019 has been upheld. Court has held that all medical colleges, including those run by deemed universities, will come under NMC fee fixation only.

With respect to the Office Memorandum, the Court has held that directing fees for 50% of seats to be fixed equivalent to govt college fees will result in cross subsidy which is barred by the Supreme Court. The court has further held that the same will also result in seats going vacant due to high fees.

Therefore, the Court has directed the NMC to reconsider and issue a fresh Office Memorandum in light of the judgment. Till then, the court has directed that existing fee fixation practise will continue.
[9/9, 13:02] Sekarreporter1: Mr. Vijaynarayan, PS Raman and ArL Sundaresan appeared for petitioners.
[9/9, 13:02] Sekarreporter1: Learned ASG appeared for respondents.
[9/10, 12:13] Sekarreporter1: தமிழக அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக கோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக முதன்மைச் செயலாளரும், தற்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு, கடந்த 2020ம் ஆண்டு கோவையில் பேசிய போது, இன்னும் 11 மாதங்களில் அமைச்சர் வேலுமணி கோவை சிறையில் அடைக்கப்படுவார் எனத் தெரிவித்திருந்தார்.

இது அமைச்சரின் பணி குறித்து களங்கம் கற்பித்ததாக கூறி, நேருவுக்கு எதிராக கோவை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, நேரு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், நேருவின் பேச்சு அமைச்சரின் பணி குறுத்து அவதூறு பரப்பும் வகையில் இல்லை எனவும், வேலுமணியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறி, அமைச்சர் நேருவுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
[9/10, 12:38] Sekarreporter1: விசாரணை என்ற பெயரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறையினரால் துன்புறுத்தப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம் விசாரணைக்கு அழைப்பதற்கான வழிமுறைகளையும் வகுத்து உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை பிரகாஷ் என்பவர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட தங்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று காவல்துறையினர் துன்புறுத்துவதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், மனுதாரர்கள் மீது அளிக்கப்பட்ட புகார் நிலுவையில் இருப்பதாகவும் அது குறித்த விசாரணைக்காகவே அவர்களை அழைத்ததாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், குற்ற வழக்குகளை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகளுக்கு போதிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடைமுறைகளில்
நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் துன்புறுத்துவதாகவும் அதற்கு தடை விதிக்கக்கோரியும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாக தெரிவித்துள்ள நீதிபதி இது போன்ற சூழலில் நீதிமன்றம் தலையிடும் என கூறியுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரணைக்கு அழைப்பதற்காக வழிகாட்டு விதிகளை வகுத்தும் நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, விசாரணைக்கு ஆஜராகுமாறு எழுத்துப்பூர்வமாக மட்டுமே சமமன் அனுப்ப வேண்டுமெனவும் அவ்வாறு அனுப்பும் போது ஆஜராக வேண்டிய நாள், நேரம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் எனவும் விசாரணையின் போது நடக்கும் நிகழ்வுகளை முழுமையாக எழுத்து முறையில் குறிப்பெடுத்து வைக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

விசாரணைக்கு அழைப்பவர்களை துன்புறுத்த கூடாது எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[9/10, 12:52] Sekarreporter1: விசாரணைக்கு ஆஜராகுமாறு எழுத்துப்பூர்வமாக மட்டுமே சம்மன் அனுப்ப வேண்டும்

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

விசாரணை என்ற பெயரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலிசாரால் துன்புறுத்தப்படுவது குறித்து உயர் நீதிமன்றம் அதிருப்தி

விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று காவல்துறையினர் துன்புறுத்துவதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டுமெனக் கோரி திருப்பூரை சேர்ந்தவர்கள் தொடர்ந்த வழக்கு

குற்ற வழக்குகளை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள போதிய அதிகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவதில்லை: நீதிமன்றம்

விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் துன்புறுத்துவதாகவும் அதற்கு தடை விதிக்கக்கோரியும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன : நீதிமன்றம்

குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரணைக்கு அழைப்பதற்கான வழிகாட்டு விதிகளை வகுத்தும் நீதிபதி இளந்திரையன் உத்தரவு
[9/10, 13:04] Sekarreporter1: விசாரணை என்ற பெயரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறையினரால் துன்புறுத்தப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம் விசாரணைக்கு அழைப்பதற்கான வழிமுறைகளையும் வகுத்து உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை பிரகாஷ் என்பவர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட தங்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று காவல்துறையினர் துன்புறுத்துவதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், மனுதாரர்கள் மீது அளிக்கப்பட்ட புகார் நிலுவையில் இருப்பதாகவும் அது குறித்த விசாரணைக்காகவே அவர்களை அழைத்ததாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், குற்ற வழக்குகளை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகளுக்கு போதிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடைமுறைகளில்
நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் துன்புறுத்துவதாகவும் அதற்கு தடை விதிக்கக்கோரியும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாக தெரிவித்துள்ள நீதிபதி இது போன்ற சூழலில் நீதிமன்றம் தலையிடும் என கூறியுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரணைக்கு அழைப்பதற்காக வழிகாட்டு விதிகளை வகுத்தும் நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, விசாரணைக்கு ஆஜராகுமாறு எழுத்துப்பூர்வமாக மட்டுமே சமமன் அனுப்ப வேண்டுமெனவும் அவ்வாறு அனுப்பும் போது ஆஜராக வேண்டிய நாள், நேரம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் எனவும் விசாரணையின் போது நடக்கும் நிகழ்வுகளை முழுமையாக எழுத்து முறையில் குறிப்பெடுத்து வைக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

விசாரணைக்கு அழைப்பவர்களை துன்புறுத்த கூடாது எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[9/10, 17:02] Sekarreporter1: பிரெஞ்ச் குடியுரிமை பெற்றதை மறைத்து இந்திய பாஸ்போர்ட் பெற்றதாக அண்ணன் – தங்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய தந்தைக்கும், பிரெஞ்ச் தாய்க்கும் பிறந்த ஜெகப்பிரியன், திவ்ய பிரியா ஆகிய இருவருக்கும், அவரது தாய் 1989ம் ஆண்டு பிரான்ஸ் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பிரெஞ்ச் குடியுரிமை பெற்றுள்ளார்.

இந்தியாவில் பிறந்து, தந்தையிடம் வளர்ந்த இருவரும், கடந்த 2005, 2007ம் ஆண்டுகளில் இந்திய பாஸ்போர்ட் பெற்று அதை புதுப்பித்தும் வந்துள்ளனர்.

இந்நிலையில், தங்களுக்கு பிரெஞ்ச் குடியுரிமை பெற்ற விவரம் தெரிந்த பின் 2019ம் ஆண்டு பிரான்ஸ் பாஸ்போர்ட் பெற்ற இருவரும், இந்திய பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைத்த நிலையில், பிரெஞ்ச் குடியுரிமையை மறைத்து இந்திய பாஸ்போர்ட் பெற்றதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவினர், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அண்ணன் – தங்கை இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது, சிறு குழந்தைகளாக இருந்த மனுதாரர்களுக்கு, பிரெஞ்ச் குடியுரிமை பெற்ற விவகாரம் தெரியாது என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பிரெஞ்ச் குடியுரிமை பெற்ற விவகாரம் மனுதாரர்களுக்கு தெரியாது என்பதால் அவர்களுக்கு எதிராக பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது எனவும், உண்மையை மறைத்தார்கள் என்ற கேள்விக்கே இடமில்லை எனவும் கூறி, இருவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
[9/10, 17:34] Sekarreporter1: தனி நபருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து தார் சாலை அமைத்ததற்காக, மாற்று இடம் அளிக்க வேண்டுமென்ற கிராம பஞ்சாயத்தின் பரிந்துரை மீது முடிவெடுக்கும்படி திருத்தணி தாசில்தாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை வட்டத்தில் உள்ள புளியாங்குண்டா கிராமத்தை சேர்ந்த முனிசேகர் என்பவர் தொடந்துள்ள வழக்கில், தனது குடும்பத்திற்கு சொந்தமான இடத்தில், 380 சதுர அடியை ஆக்கிரமித்து வீரராகவபுரம் பஞ்சாயத்தினர் கடந்த 2010ஆம் ஆண்டு தார் சாலை அமைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இத்தொடர்பாக அரசிடம் விளக்கம் கேட்டபோது உரிய பதில் இல்லை என்றும், பட்டியல் இனத்தவர் வசிக்கும் பகுதியான ஆதி ஆந்திரா காலனிக்கு ஒதுக்கப்பட்ட தார் சாலை திட்டத்தை, தவறாக செயல்படுத்தியது தெரிய வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக 2016ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் முனிசேகர் தொடர்ந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரருக்கு மாற்று இடம் வழங்க வேண்டுமென வீரராகவபுரம் கிராம பஞ்சாயத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகஸ்ட் 16ஆம் தேதி, திருத்தணி வட்டாட்சியருக்கு கடிதம் எழுத்தியுள்ளதாக கூறி அதன் நகல் தாக்கல் செய்யப்பட்டது.

அதை பதிவு செய்த நீதிபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் அனுப்பியுள்ள பரிந்துரையை வட்டாட்சியர் ஆராய்ந்து, செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு எடுக்கப்படும் முடிவு குறித்த நகலை செப்டம்பர் 19ஆம் தேதி தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You may also like...