Madras high court orders october 14

[10/14, 18:23] Sekarreporter 1: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நீட்டிப்பது குறித்து மறுஆய்வு செய்யலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

தனியார் தொழிற்சாலையில் இரவு காவலாளியாக இருப்பவரின் மகள் வர்ஷா, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மருத்துவப் படிப்பு ஆசையில் இருந்த நிலையில், மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால், தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் துணை மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார்.

கிரிட்டிகல் கேர் டெக்னாலஜி என்கிற என்ற படிப்பை படித்துக் கொண்டே இருமுறை நீட் தேர்வு எழுதி ஒரு முறை 210 மதிப்பெண்ணும், 250 மதிப்பெண்ணும் எடுத்திருந்தார்.

அரசு உதவி பெறும் பள்ளியில் படித்ததால், தமிழக அரசின் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழும் இடம் கிடைக்காத சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் 7.5 % ஒதுக்கீட்டை தனியார் பள்ளிகளுக்கும் வழங்கி இருந்தால் தனக்கும் மருத்துவ இடம் கிடைத்திருக்கும் என்றும், தனியார் பள்ளியில் படித்தவர்களுக்கும் அமல்படுத்தக் கோரி தமிழக அரசிடம் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் நடவடிக்கை எடுக்காத நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரசிடம் அளித்த மனுவை பரிசீலித்து மருத்துவ படிப்பில் தனக்கு ஒரு இடத்தை ஒதுக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துக்குமார், அரசு கூடுதல் வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு ஆகியோர் ஆஜராகி, தனியார் பள்ளிகளுக்கும் 7.5% இட ஒதுக்கீடு வழங்க கோரிய மனுக்களையும், இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்த வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இதன்பின்னர் நீதிபதி சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவில், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இரு நீதிபதிகள் அமர்வு நிராகரித்த நிலையில், மீண்டும் அதே நிவாரணத்தை கோர முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதேசமயம், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அரசுதான் நிதிஉதவி செய்கிறது என்பதாலும், அங்கு படிக்கும் மாணவர்களும் வசதியான குடும்பங்களை சேர்ந்தவர்கள் அல்ல என்றும், அவர்களின் பொருளாதார சமூக நிலை என்பது அரசு பள்ளி மாணவர்களை போன்று தான் உள்ளது என்றும் குறிப்பிட்ட நீதிபதி, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் நீட்டிப்பது குறித்து அரசு மறு ஆய்வு செய்யலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.

இது முழுக்க முழுக்க நீதிமன்றத்தின் கருத்தாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், இருந்தாலும் அரசின் கொள்கை முடிவுக்கு சமத்தப்பட்டது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
[10/15, 13:51] Sekarreporter 1: சனாதன தர்மம், இந்து மதத்தின்அர்த்தம் குறித்த ஆளுனரின் பேச்சுகள் தகவல் அறியும் சட்டத்தில் வராது தமிழக ஆளுனர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் பொதுக் நிகழ்ச்சிகளில் சனாதன தர்மத்தின் சிறப்புகளை விவரித்து, அதை பின்பற்றுவதே சிறப்பு என வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் சனாதன தர்மம், இந்து மதம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதிலளிக்க கோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சென்னையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி ஆகஸ்ட் 19ஆம் தேதி மனு அனுப்பியுள்ளார்.

அதில், சனாதன தர்மம் குறித்து அதிகம் பேசும் நபராக இருப்பதால், அதுகுறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க சரியான நபர் என குறிப்பிட்டு, 19 கேள்விகளை மனுவில் முன்வைத்துள்ளார்.

அதன்படி, சனாதன தர்மத்தின் கொள்கைகள் என்ன, உருவாக்கியவர் யார், வேறு எந்த நாட்டிலோ பின்பற்றப்பட்டுள்ளதா, பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்து என்ற சொல் இடம் பெற்றுள்ளதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் நீங்கள் உறுப்பினரா, தமிழக அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் பொது நிகழ்ச்சிகளில் பேச அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த விதி உங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவியின் சார்பு செயலாளர் சி.ரமா பிரபா, ஆளுனரிடம் வழக்கறிஞர் எஸ்.துரைசாமி எழுப்பிய கேள்விகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வராது என்றும், அதுதொடர்பாக தகவல்கள் ஆளுனரின் செயலகத்தில் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

[10/15, 16:54] Sekarreporter 1: குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் புகார்களை ரத்து செய்ய கோரி குற்ற விசாரணை முறைச் சட்டம் 482வது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியுமா என்பது குறித்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவரோ, அவர் சார்பில் மற்றொருவரோ அல்லது குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரியோ, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் அளிக்க குடும்ப வன்முறை தடைச் சட்டம் வகை செய்கிறது.

இந்தச் சட்டப் பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்படும் புகார் மனுக்களை ரத்து செய்யக்கோரி குற்ற விசாரணை முறைச் சட்டம் 482வது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்ய முடியாது என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால், குடும்ப வன்முறை தடைச் சட்ட நடைமுறைகள் உரிமையியல் நடைமுறைகளாக இருந்தாலும், புகார் மனுக்களை ரத்து செய்யக் கோரும் வழக்குகளை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

ஆனால் இது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது என்பதால், குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் புகார் மனுக்களை ரத்து செய்யக்கோரி குற்ற விசாரணை முறைச் சட்டம் 482வது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரலாமா என்ற சட்ட கேள்விக்கு விடை காணும் வகையில், இந்த வழக்குகளை மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரிக்க தனி நீதிபதி, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்திருந்தார்.

இதன் அடிப்படையில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டிக்கா ராமன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் அடங்கிய முழு அமர்வு அமைக்கப்பட்டது.

இந்த முழு அமர்வு, இன்று சிறப்பு அமர்வாக இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

அப்போது ஒரு தரப்பில், குடும்ப வன்முறை தடைச் சட்டப் பிரிவுகள் உரிமையியல் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும், இந்த சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகார்கள் மீது பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை மீறும்பட்சத்தில் அது குற்றமாகிறது என்பதால் இந்த புகார்களை ரத்து செய்யக் கோரி குற்ற விசாரணை முறைச் சட்டம் 482வது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகள் விசாரணைக்கு உகந்தவை தான் என விளக்கமளிக்கப்பட்டது.

ஆனால், குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் சார்பு நீதிமன்றம், மாஜிஸ்திரேட் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றங்களிலும் நிவாரணம் கோரலாம் எனவும், இந்த சட்ட நடைமுறைகள் முழுவதும் உரிமையியல் நடைமுறை என்பதால், புகார்களை ரத்து செய்யக் கோரி குற்ற விசாரணை முறைச் சட்டம் 482வது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என மற்றொரு தரப்பிலும் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.madras high court orders Oct 24

You may also like...