Madras high court october 13th day news

 

[12/10, 11:07] Sekarreporter1: வெள்ளிக்கிழமை விஜயதசமி நாளன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா என அரசின் கருத்தை பெற்று இன்று பிற்பகல் தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ஆர்.பொன்னுசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமல்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டுத் தலங்கள் மூடியிருக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், நவராத்திரி பண்டிகையின் முக்கிய நாளாக கொண்டாடப்படும் விஜயதசமி அக்டோபர் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் வருவதால், அன்றைய தினம் கோவில்களை திறக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

ஏற்கனவே வழிபாட்டு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தரிசனத்திற்காக கோவில்களை திறக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு என்ற பட்டியலில் வராததால் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் நிலையான வழிகாட்டு நெறிகளை பின்பற்றி விஜயதசமியன்று மட்டும் கோயிலைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அப்துல் குத்தூஸ் அமர்வில் முறையிட்டார்.

அப்போது ஆஜராயிருந்த அரசு தலைமை வழக்கறிஞர், மத்திய அரசினுடைய வழிகாட்டு நெறிமுறைகளின்படி தான் கோவிலில் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து அரசின் கருத்தை அறிந்து பிற்பகல் தெரிவிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை பிற்பகல் 1.30 மணிக்கு தள்ளிவைத்தனர்.
[12/10, 12:08] Sekarreporter1: வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாக கூறி, வாக்கு எண்ணிக்கை முழுவதையும் வீடியோ பதிவு செய்ய உத்தரவிடக் கோரி திரிசூலம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும், வார்டு உறுப்பினர் பதவிக்கும், பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிட்ட சரஸ்வதி, சத்தியநாராயணன், முத்துக்கனி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்கு எண்ணிக்கை ஏற்கனவே துவங்கி விட்டதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், மாநில தேர்தல் ஆணையம், சட்டப்படி உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புவதாக கூறி, மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

இதேபோல வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்யக் கோரிய வழக்குகளிலும் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[12/10, 12:54] Sekarreporter1: தமிழக கோவில்களில் உள்ள நகைகள் 1977 ம் ஆண்டு முதல் உருக்கப்பட்டு தங்க கட்டிகளாக மாற்றி வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளதாக தமிழக அரசு  சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது..

தமிழக கோவில்களில் உள்ள நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்ய இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சரவணன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்தவழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், கோவில்களில் என்னென்ன நகைகள் உள்ளன என்பன குறித்து பதிவேடுகள்  இல்லாததால் நகைகளை உருக்க தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.

மேலும்,கோவில்களில் புராதான நகைகள் எவை என்பது குறித்தும்
கோவிலுக்கு தேவையான நகைகள் எது என்பது குறித்தும் கண்டறிய வேண்டும் என்றும் தமிழகத்தில் உள்ள 38 கோயில்களில் 2,137 கிலோ தங்கத்தை உருக்கி  தங்க கட்டிகளாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளதாகவும்,நகைகளை
தணிக்கை செய்யாமல் உருக்க கூடாது என வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம
1977 ம் ஆண்டு முதல் கோவில் நகைகள் உருக்கப்பட்டு  வருவதாகவும், 5 லட்சம் கிலோ நகைகள் ஏற்கனவே உருக்கப்பட்டு
தங்கக் கட்டிகளாக மாற்றி டெபாசிட் செய்ததன் மூலம் ஆண்டுக்கு 11 கோடி ரூபாய் வட்டி வருவாய் கிடைப்பதாக  தெரிவித்தார்.

மேலும் நகைகளை தணிக்கை செய்ய உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரும், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவரும் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுதொடர்பாக
செப்டம்பர் 9 ம் தேதி இயற்றப்பட்ட அரசாணையும் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, அரசானை குறித்து கூடுதல் மனு தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு அனுமதியளித்த நீதிபதிகள் விசாரணையை அக்டோபர் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்
[12/10, 15:01] Sekarreporter1: தமிழகத்தில் வரும் வியாழக்கிழமை விஜயதசமி நாளன்று கோவில்களை திறப்பது குறித்து அரசே முடிவு எடுக்கலாம் என #MadrasHighCourt தெரிவித்துள்ளது.
[12/10, 15:33] Sekarreporter1: வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமி நாளன்று கோவில்களை திறப்பது குறித்து தமிழக அரசே முடிவு எடுக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ஆர்.பொன்னுசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமல்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டுத் தலங்கள் மூடியிருக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், நவராத்திரி பண்டிகையின் முக்கிய நாளாக கொண்டாடப்படும் விஜயதசமி அக்டோபர் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் வருவதால், அன்றைய தின்ம் கோவில்களை திறக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். ஏற்கனவே வழிபாட்டு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தரிசனத்திற்காக கோவில்களை திறக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலில் வராததால் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் நிலையான வழிகாட்டு நெறிகளை பின்பற்றி விஜயதசமியன்று மட்டும் கோயிலைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அப்துல் குத்தூஸ் அமர்வில் முறையிட்டார்.

அப்போது தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மத்திய அரசினுடைய வழிகாட்டு நெறிமுறைகளின்படி தான் கோவில்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் இதுகுறித்து அரசின் கருத்தை அறிந்து பிற்பகல் தெரிவிக்குமாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் பிற்பகல் ஆஜராகிய தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், கொரானா இரண்டாவது அலையின் தாக்கம் இன்னும் முழுமையாக குறையவில்லை எனவும் தொடர்ந்து நாடு முழுவதும் தற்போதும் முன்று லட்சத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளதகவும் தெரிவித்தார். ஏற்கனவே கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை குறித்து மத்திய அரசும், சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். அதில் தொடர்ந்து அடுத்தடுத்த பண்டிகைகள் வருவதால் அதிக அளவில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கொரானா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
ஆயுத பூஜை, விஜயதசமி, மீலாடி நபி உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ளதால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும், தளர்வுகள் அளிப்பது தொடர்பாகவும் கொரானா நிலவரம் தொடர்பாகவும் நாளை தமிழ்நாடு முதலமைச்சர், மருத்துவ நிபுணர்களுடன் உள்ளிட்ட
நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக அதன் முடிவில் தான் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அதனால் இதில் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து நீதிபதிகள், விஜயதசமி அன்று கோயில்கள் திறப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு முடிவு செய்யும் எனவும் இதில் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்காது என தெரிவித்தனர்.madras

You may also like...