Madras HC Quashes Charge Sheet Against 8 Over 2022 Public Protest Against Karnataka Hijab Ban https://lawbeat.in/news-updates/madras-hc-quashes-charge-sheet-against-8-over-2022-public-protest-against-karnataka-hijab-ban-1627351 : சுதந்திரமாக ஒன்றுகூடுவதும் கருத்துகளை வெளிப்படுத்துவதும் அனைத்து குடிமக்களுக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமை

[01/09, 15:08] sekarreporter1: Madras HC Quashes Charge Sheet Against 8 Over 2022 Public Protest Against Karnataka Hijab Ban https://lawbeat.in/news-updates/madras-hc-quashes-charge-sheet-against-8-over-2022-public-protest-against-karnataka-hijab-ban-1627351
: சுதந்திரமாக ஒன்றுகூடுவதும் கருத்துகளை வெளிப்படுத்துவதும் அனைத்து குடிமக்களுக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமை என கூறிய சென்னை உயர்நீதிமன்றம் ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்தது.

கர்நாடகாவில் இஸ்லாமிய சிறுமிகள் பள்ளிக்கு ஹிஜாப் அணிய தடை விதித்தை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கோவை சேலையூர்புரத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று கர்நாடக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

இதில் பங்கேற்ற மூன்று பெண்கள் உட்பட 8 நபர்கள் மீது, கலவரத்தை தூண்டியது, சட்ட விரோத ஒன்று கூடல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு கோவை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணையில் உள்ள நிலையில், வழக்கை ரத்து செய்ய அவர்கள் சென்னை உயர்நீதிமன்றம் நாடினார்.

நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் டி.மூர்த்தி, அவர்கள் குற்றமற்றவர்கள் எனவும் காவல் துறை கூறும் குற்றங்கள் எதையும் செய்யவில்லை என தெரிவித்தார்.

அரசு தரப்பு வழக்கறிஞர் ஆர். கணேஷ் குமார், கீழமை நீதிமன்றத்தில் விசாரணை இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், காவல்துறை இறுதி அறிக்கையும் சமர்ப்பித்துள்ளதாகவும் கூறி வழக்குகளை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, போதிய காரணங்கள் இல்லாமல் ஒன்று கூடி கருத்துக்களை தெரிவிப்பதை தடுக்க முடியாது எனவும், அது இந்திய அரசியலமைப்பு தந்துள்ள உரிமை என கூறி வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com