Law officers appointment case pt Asha j order
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் சட்ட அலுவலர் நியமன தொடர்பான கட்டுப்பாடுகள் விதிக்கும் அறிவிப்பாணையை மாற்றி அமைக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரை சேர்ந்த வழக்கறிஞர் கே.ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்ட அலுவலர் நியமனம் தொடர்பாக சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு கடந்த ஜூன் ஒன்றாம் தேதி கொண்டு வந்தங அறிவிப்பானை எதிர்த்து வழக்கு ஒன்று தொடர்ந்தார்.
அதில், கடந்த ஒன்றாம் தேதி சட்ட அலுவலர் நியமனம் தொடர்பாக தகுதி வரம்புகளை நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவிப்பானை கொண்டு வந்துள்ளதாகவும், வழக்கறிஞர் சட்டம்- 1961 ன படி சென்னை நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நியமிக்கப்படும் சட்ட அலுவலர் நியமனத்தில் கண்டிப்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்த வழக்கறிஞர் மட்டுமே தகுதி உடையவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
ஆனால் உச்ச நீதிமன்ற சட்ட அலுவலருக்கான தகுதி வரம்புகளில் வழக்கறிஞர் சட்டத்தின் கீழ் ஏதேனும் ஒரு பார் கவுன்சிலில் பதிவு செய்தால் போதும் என்ற நிலை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்
மேலும்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக தான் பணிபுரிந்து வருவதாகவும், தமிழக அரசு கொண்டுவந்துள்ள அரசாணை மூலம் என்னைப் போன்ற ஏராளமான வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ,சட்ட அமைச்சர், அரசு தலைமை வழக்கறிஞர், தலைமை செயலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு கொடுத்தும் உரிய முறையில் பரிசீலிக்கப்படவில்லை என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி P.T.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த தொடர்பாக மனுதாரர் கொடுத்த கோரிக்கை மனு மீது பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படி அரசு தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்