அதிகாரம் வந்து விட்டால், குதிரை பேரம் போன் றவை நடக்க வாய்ப்புள்ளது. இதை கருத்தில் வைத்து, கவர்னர் பெரும்பான்மையை உறுதி செய்து கொள்வதை, நியாயமான ஒன்றாக பார்க்கலாம். -கே.சக்திவேல், வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றம்
புதிய அரசு அமைய காலக்கெடு இல்லை கவர்னர் ஆதாரம் கேட்பதில் தவறில்லை
ஆட்சி அமைக்க தேவையான 118 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு த.வெ.க.,வுக்கு இல்லாததால், கவர்னர் ஆட்சி அமைக்க அழைக் கவில்லை. ஆட்சி அமைக்க கோரும் கட்சி, பெரும்பான் மையை நிரூபிக்க முடியுமா என கவர்னர் உறுதி செய்து கொள்வதில் தவறு கிடையாது.
கூட்டணி என குறிப்பிட்ட தால், பெரும்பான்மைக்கு தேவை யான எம்.எல்.ஏ.,க்கள் விபரங் களை சுவர்னர் கோரியுள்ளார்.
தமிழகத்தில், 16வது சட்டசபை கலைக்கப்பட்டு உள்ளது. இவ்வ ளவு நாட்களுக்குள், புதிய அரசு அமைய வேண்டும் என எவ்வித காலக்கெடுவும் கிடையாது. அதே நேரத்தில், குறிப்பிட்ட காலத்துக்’ குள் அரசு அமைவதே ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
தனிப்பெரும் கட்சியான த.வெ.க., ஆட்சி அமைக்க அழைக்கும்படி கவர்னரிடம் கோரும்போது, அரசியல் சாசனப் படி பெரும்பான்மையை உறுதி செய்து, ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்கலாம்.
அரசியல் சட்டத்தில் இது குறித்து தெளிவாக கூறப்படவில்லை. கர்நாடகா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெரும்பான்மை இல்லாத கட்சிகள், கூட்டணி ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த போது, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.
எனவே, அரசியல் சாசன
சட்டத்தை, அனுபவங்களின் அடிப்படையில் அணுக வேண் டும். அந்த வகையில், பெரும் பான்மை உள்ளதா என கவர்னர் உறுதி செய்வதில் தவறு இல்லை. கூட்டணி என கூறி விட்டு, 112 உறுப்பினர்கள் ஆதரவு என்ப திலேயே தங்களுக்கு பெரும் பான்மை இல்லை என்பதை த.வெ.க., ஒப்புக் கொண்டுள்ளது.
அவ்வாறு இருக்கும் போது, ஒவ்வொரு உறுப்பினர்களை யும் அழைத்து சுவர்னர் கேட்க முடியாது. மாறாக, அவர் ஆட்சி அமைக்க கோரும் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதா என் பதை உறுதிப்படுத்தி கொள்ள லாம். அதில் தவறு இல்லை.
கவர்னர் நேரடியாக உறுப் பினர்களை அழைத்து, அவர்க ளின் உண்மை தன்மையை சரி பார்க்க முடியாது. அது, சபையில் தான் நடக்க வேண்டும். பெரும் பான்மை இல்லாதவர்களுக்கு ஆட்சி பொறுப்பை கொடுத்தால், கிடைத்த அதிகாரத்தை பயன்ப டுத்தி, அவர்கள் உறுப்பினர்களை விலைக்கு வாங்கலாம்.
மேலும், அதிகாரம் வந்து விட்டால், குதிரை பேரம் போன் றவை நடக்க வாய்ப்புள்ளது. இதை கருத்தில் வைத்து, கவர்னர் பெரும்பான்மையை உறுதி செய்து கொள்வதை, நியாயமான ஒன்றாக பார்க்கலாம்.
-கே.சக்திவேல், வழக்கறிஞர்
சென்னை உயர் நீதிமன்றம்