வழக்கறிஞர் சங்கங்களின் மிகப் பெரிய சங்கமான சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் (MHAA) தேர்தல் ஏப் 29ம் தேதி நடைபெறுகின்றது.

வழக்கறிஞர் சங்கங்களின் மிகப் பெரிய சங்கமான சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் (MHAA) தேர்தல் நாளை ஏப் 29ம் தேதி நடைபெறுகின்றது.

தமிழகத்தில் மிகப் பெரிய வழக்கறிஞர் சங்கமாகவும் 150 ஆண்டுகளுக்கு மேல் உள்ள சங்கமாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் (MHAA) உள்ளது. இதில் சுமார் 21 ஆயிரம் வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் சுமார் 5 ஆயிரத்து 800 வழக்கறிஞர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்களாக உள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2023 ஆம் ஆண்டு சங்க தேர்தல் நடந்தது.

தற்போது நடைபெறும் தேர்தலில்
தலைவர் பதவிக்கு ஆர்.சி.பால் கனகராஜ்,வேல்முருகன் ஆர்.கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 5 பேரும் துணை தலைவர் பதவிக்கு மோகன்தாஸ், உள்ளிட்ட 13 பேரும் போட்டியிடுகின்றனர்.

செயலாளர் பதவிக்கு 9 பேரும் பொருளாளர் பதவிக்கு ராஜேஷ் அனீஸ்குமார் உள்ளிட்ட 6 பேர் போட்டியிடுகின்றனர்.

நூலகர் பதவிக்கு 7 பேர். 6 பதவிற்கான மூத்த செயற்குழு உறுப்பினர் பதவிற்கு 49 பேரும், 5 பதவிக்கான இளைய செயற்குழு உறுப்பினர் பதவிற்கு 26 பேர் போட்டியிடுகின்றனர.

சென்னை உயர்நீதிமன்றத்தில் 150 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமாக சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கம் உள்ளது.

சங்க தேர்தலை நடத்த உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் செயல்படுகின்றார்.

இந்த தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர், 6 மூத்த செயற்குழு உறுப்பினர்கள், 5 இளைய செயற்குழு உறுப்பினர்கள் என 16 பதிவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 115 பேர் போட்டியிடுகின்றனர்.

நாளை (ஏப்ரல் 29 தேதி) காலை
10 மணிக்கு தொடங்கும் வாக்கு பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த தேர்தலுக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

வாக்கு பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தவுடன் மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும் எனவும் முதலில் தலைவர் பதிவிக்கும், பின்னர் துணைத்தலைவர் பதிவிற்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பின்னர் மற்ற பதிவிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தவுடனே வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கபடும்.

வெற்றி பெற்றவர்கள் அடுத்த இரண்டு ஆண்டு சங்க பதவியில் இருப்பார்கள்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com