15, 14:31] K balu: டாஸ்மாக் வழக்கில் உச்சநீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடையா ? அல்லது வேறு

[5/15, 14:31] K balu: டாஸ்மாக் வழக்கில் உச்சநீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடையா ?
அல்லது வேறு வகையான உத்தரவா? நடந்தது இதுதான்

டாஸ்மாக் கடைகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது அரசு தரப்பில் வாதங்களை முன் வைப்பதற்கு முன்பாக கேவியட் மனு தாக்கல் செய்த வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது எனவே இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று முறையிட்டனர் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற உத்தரவை தவறாக புரிந்துகொண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது ஆதார் அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்திருப்பது வினோதமாக உள்ளது என்று வாதிட்டார். பல வழக்கறிஞர்கள் தங்கள் கருத்தை கூற முற்பட்டனர் வழக்கு வாதம் நிறைவு பெறுவதற்கு முன்பாக வழக்கறிஞர்களின் பெரும் கூச்சலுக்கு மத்தியில் நீதிபதிகள் வழக்கில் ஏதோ ஒரு உத்தரவை பிறப்பித்து ஓரு சில நமிடத்தில் நிமிடத்தில் மற்ற வழக்குகளை விசாரிக்க ஆரம்பித்தனர்

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று காலை வழக்கு விசாரணை தொடங்கியபோதே அரசு தலைமை வழக்கறிஞரும் மற்ற அரசு வழக்கறிஞர்களும் ஒன்றாக பேசிக் கொண்டவர்கள் போல் வழக்கு ஆவணங்கள் இன்னும் எங்களுக்கு வழங்கப்படவில்லை எதிர் மனு தாக்கல் செய்ய திங்கள்கிழமை வரை அவகாசம் வேண்டும் என்று கூறினர் பின்னர் தலமை வழக்கறிஞர் தமிழக அரசினுடைய நிதி நிலை குறித்தும் நிதி நெருக்கடி குறித்தும் டாஸ்மாக்கின் வருவாய் அரசுக்கு எந்த அளவிற்கு முக்கியம் என்பது குறித்தும் வாதிட்டு வந்தார் அத்தருணத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்ட உடன் அரசு தலைமை வழக்கறிஞர் உயர் நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருக்கிறது என்று தெரிவித்தார் அனாலும் தீர்ப்பு என்ன என்ற விவரம் முழுமையாக தெரியவில்லை என்று நீதிபதியிடம் கூறினார் அதனை கேட்ட தலைமை நீதிபதி அவர்கள் எது எப்படி இருந்தாலும் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அது என்ன உத்தரவு என்று முழுமையாக தெரிந்து கொள்ளாமல் மேற்கொண்டு இந்த வழக்கை விசாரிப்பது என்பது முறையல்ல எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இந்த வழக்கை ஒத்தி வைக்கிறோம் என்று உத்தரவிட்டனர் அதுதான் சரியான முடிவும்கூட. ஆனால் உச்ச நீதிமண்றம் இந்த வழக்கை கையாண்ட விதம் வழக்கறிஞர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது.

டாஸ்மாக் கடைகளை திறப்பது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாக வைத்து முடிவெடுக்கும். சென்னை உயர்நீதிமன்ற வழக்கு தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எது எப்படி இருந்தாலும் நேற்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் தமிழக அரசு தலைமை வழக்கறிஞரை பார்த்து எழுப்பிய கேள்விகள் நிலையானவை நியாயமானவை அதற்கு தமிழக அரசு நிச்சயமாக பதில் அளித்து தான் ஆக வேண்டும்

நீதிமன்ற உத்தரவு எதுவாக இருந்தாலும் தமிழக அரசு இந்த ஊரடங்கு காலத்தில் மதுக் கடைகளை திறக்க கூடாது என்பதே பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது அதுவரை மதுவுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
[5/15, 14:33] Sekarreporter 1: O🍁🍁

You may also like...