Supremecourt Advt Gs Mani: பழமை வாய்ந்த சென்னை கொரட்டூர் அகஸ்தீஸ்வரர் கோயில் நில ரியல் எஸ்டேட் மோசடி ரூ.2,500 கோடி விவகாரத்தில் எஃப்ஐஆர் வழக்கு பதிவு செய்து சிபிஐ அல்லது நீதிமன்ற கண்காணிப்பு சிறப்பு புலனாய்வு விசாரணை கோரி பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ். மணி புகார் மனு:

[14/02, 10:47] Supremecourt Advt Gs Mani: பழமை வாய்ந்த சென்னை கொரட்டூர் அகஸ்தீஸ்வரர் கோயில் நில ரியல் எஸ்டேட் மோசடி ரூ.2,500 கோடி விவகாரத்தில் எஃப்ஐஆர் வழக்கு பதிவு செய்து சிபிஐ அல்லது நீதிமன்ற கண்காணிப்பு சிறப்பு புலனாய்வு விசாரணை கோரி பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ். மணி புகார் மனு:

சென்னை கொரட்டூரில் பழமை வாய்ந்த அகஸ்தீஸ்வரர் கோயில் நிலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் 2,036 வீடுகள் தொடர்பான சுமார் ரூ.2,500 கோடி அளவிலான மிகப்பெரிய ரியல் எஸ்டேட் மோசடி குறித்து உடனடி குற்றப்பதிவு செய்து சிபிஐ அல்லது சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ். மணி அவர்கள் புகார் மனு அனுப்பியுள்ளார்.

இந்த புகார் மனுவை தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, ஆவடி காவல் ஆணையர், தமிழக லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர், மத்திய உள்துறை செயலர் மற்றும் சிபிஐயிடம் அனுப்பியுள்ளார்.

கொரட்டூரில் முன்னர் “Alliance Builders” என செயல்பட்டு தற்போது “Urban Rise” என பெயர் மாற்றப்பட்டு செயல்படும் நிறுவனம், பழமை வாய்ந்த அகஸ்தீஸ்வரர் கோயில் நிலம் என்பதை மறைத்து ஆயிரக்கணக்கான மக்களை ஏமாற்றி 2,036 வீடுகளை கட்டி விற்றுள்ளதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மோசடி திட்டத்தில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட அப்பாவி நடுத்தர குடும்ப பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புகாரில் மேலும், சம்பந்தப்பட்ட நிலம் பழமை வாய்ந்த அகஸ்தீஸ்வரர் கோயில் நிலம் என்பதால் இது இந்து அறநிலையத்துறை (HR&CE) கட்டுப்பாட்டில் உள்ள கோயில் சொத்து என நீதிமன்ற தீர்ப்பில் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் பதிவு துறை, வருவாய் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உரிய சரிபார்ப்பு இன்றி ஆவணங்களை பதிவு செய்தது எப்படி என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், பல வங்கிகள் நில உரிமை ஆவணங்களை முழுமையாக சரிபார்க்காமல் வீட்டு கடன்கள் வழங்கியுள்ளனவா என்பது தொடர்பாகவும் முழுமையான விசாரணை தேவைப்படுவதாக ஜி.எஸ். மணி வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட வீடு வாங்கியவர்கள் ஏற்கனவே காவல்துறையில் புகார் அளித்ததுடன், டிஜிபி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டமும் நடத்தியுள்ளனர்.
ஆயிரக்கணக்கான நடுத்தர குடும்பங்கள் வீட்டு கடன் சுமையுடன் தங்கள் வீட்டின் சட்டப்பூர்வ உரிமை குறித்து அச்சத்தில் உள்ளனர்.

இதனை முன்னிட்டு,
பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகளின் கீழ் உடனடி FIR பதிவு செய்ய,
நிறுவன உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்ய வேண்டும்.

சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து. மோசடி செய்து பெறப்பட்ட அவர்களது நிறுவன சொத்துகளை முடக்கம் செய்து.

சிபிஐ அல்லது சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான SIT அமைத்து நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த
தமிழக அரசும் காவல்துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.எஸ். மணி தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

“கோயில் சொத்துக்களை பாதுகாப்பது அரசின் கடமை. ஆயிரக்கணக்கான குடும்பங்களை ஏமாற்றிய இந்த மிகப்பெரிய மோசடியில் யார் யார் தொடர்புடையவர்கள் என்பதைக் கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்,”

என அவர் அந்தப் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்காவிட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற உள்ளதாகவும் இந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
[14/02, 10:48] Sekarreporter: 👍

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com