Sc advt GS mani case today. Sc hearing ist item regarding GRSJ issue

[28/01, 08:43] Supremecourt Advt Gs Mani: மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவு விவகாரத்தில் நீதியரசர் ஜி ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் பரப்பும் யூடியூபர் மற்றும் போராட்டக்காரர்கள் மீது கிரிமினல் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி பாஜக வழக்கறிஞர் ஜி எஸ் மணி தாக்கல் செய்த பொதுநல வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதியரசர் அரவிந்த் குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது!.

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர் ஜி ஆர் சாமிநாதன் 1.12.2025 அன்று கோவில் நிர்வாகத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு டிவிஷன் பென்ச் மதுரை கிளை தள்ளுபடி செய்து.

இந்த தள்ளுபடி செய்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

மேலும் தனி நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் அளித்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் ஆங்காங்கே போராட்டங்களுக்கு அனுமதி அளித்திருந்தது.

மேலும் நீதி அரசர் ஜி ஆர் சுவாமிநாதன் அவர்களுக்கு எதிராக அவதூறு கருத்துக்களும் கடுமையான நீதிமன்ற கண்டனத்துக்குரிய விமர்சனங்களையும் ஆளும் திமுக ஆதரவு கட்சிகளான கம்யூனிஸ்டு போன்ற கட்சிகள் தனிநபர்கள் திமுக ஆதரவு youtubeர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பொதுவெளியிலும் சென்னை மதுரை உயர்நீதிமன்ற வளாகங்களில் அனுமதி இன்றி சட்டவிரோத போராட்டங்களை நடத்தினர்.

நீதிபதி மற்றும் நீதிமன்றத்தின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள் இதனை அரசு மற்றும் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது இவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களுக்கு எதிராக சாதி மத அவதூறு கருத்துக்களையும் சமூகத்தில் சட்டம் ஒழுங்கு மதக் கலவரம் உண்டாகும் வகையில் அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

மேலும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அவர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளையும் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

இவர்கள் மீது கடுமையான கிரிமினல் வழக்கு உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்பட தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் உத்தரவிட வேண்டுமென பாஜக வழக்கறிஞர் ஜி எஸ் மணி தாக்கல் செய்த அந்த பொதுநல மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

ஏற்கனவே 06.12.2025 அன்று வழக்கறிஞர் ஜி எஸ் மணி தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி ஜி பி, சென்னை காவல் ஆணையாளர் மற்றும் சென்னை மதுரை உயர்நீதிமன்ற பதிவாளர்களுக்கு போராட்டக்காரர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அனுப்பியதாகவும் அந்த மனு தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை எனும் எனவே உச்ச நீதிமன்றம் தலையிட்டு இந்த விவகாரத்தில் சட்டம் ஒழுங்கையும் நீதிமன்றத்தில் மாண்பையும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை நிலைநாட்ட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று 28.01.2026 அன்று விசாரணைக்கு வருகிறது.
[28/01, 08:43] Sekarreporter: 👍

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com