பழனி கோயில் செயல்அலுவலர் திரும்பப்பெறக் கோரிய வழக்கு

பழனி கோயில் செயல்அலுவலர் திரும்பப்பெறக் கோரிய வழக்கு

திண்டுக்கல் மாவட் டம் பழனி தண்டாயுத பாணி கோயில் செயல் அலுவலர் நியமனம் எதிர்த்து, டி.ஆர்.ரமேஷ் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், சவுந்தர் முன் விசா ரணைக்கு வந்தது. அப் போது டி.ஆர்.ரமேஷ் ஆஜராகி, “பழனி கோயி லுக்கு செயல் அலுவலர் நியனம் செய்தது செல் லாது. இந்துசமய அற நிலையத்துறை தமிழகம் முழுவதும் 40 கோயில் களை எடுத்து கொண்டு, அவற்றுக்கு செயல் அலு வலரை நியமித்தது செல் லாது என்று, தர்மபுர ஆதீனம் வழக்கில், சுப் ரீம்கோர்ட் 1967ல் தீர்ப் பளித்தது.

அப்படி இருக்கும் போது பழனி கோயில் செயல் அலுவலரை நிய

மித்தது செல்லாது. அவரை கோயிலில் இருந்து வெளி யேற்ற ஐகோர்ட் உத்தர விட வேண்டும்.” என்று வாதாடினார்.

இதை கேட்ட நீதிபதி கள், வழக்கின் இறுதி விசாரணையை அடுத்த மாதம் 9ம் தேதி நடத்து கிறோம் என்று அறிவித் தனர். இதுகுறித்து டி.ஆர். ரமேஷ் கூறுகையில், “சிதம்பரம் கோயிலுக்கு செயல்அலுவலரை நிய மித்தது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியது. அதன்பிறகு சிதம் பரம் கோயிலுக்கு செயல் அலுவலரை அரசு திரும் பப்பெற்றது. அதுபோல பழனி கோயிலுக்கும் திரும்பப் பெற வேண்டும். திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலுக்கு செயல் அலுவலர் செயல் படுகிறார். இதுவும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிரா னது” என்றார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com