ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கில்
சென்னையில் குரோம்பேட்டை, பல்லாவரம், ஜிஎஸ்டி சாலை ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணமாக கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கில்
, தமிழ்நாடு அரசு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியார் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையை சேர்ந்த இயற்கை ஆர்வலரான டேவிட் மனோகர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளின் ஜிஎஸ்டி சாலையில் இருந்து செல்லும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளால் ஒவ்வொரு மழைக்கும் வெள்ளக்காடாக இருகப்பதாகவும், எனவே அந்த கால்வாய்களில் மழை நீர் வடிகால் வசதியை ஏற்படுத்தினால், பல்லாவரம் தாலுகாவில் வெள்ளப்பெருக்கைத் தடுக்கலாம் என செங்கல்பட்டு மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத் தலைவரான மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோருக்கு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி மனு அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.
பல்லாவரம் பெரிய எரியில் இருந்து வெளியேறும் நீரானது குரோம்பேட்டை வெற்றி தியேட்டருக்கு எதிரே செல்லும் கால்வாய், தாம்பரம் தாலுகா அரசு மருத்துவமனை அருகே செல்லும் கால்வாய், பல்லாவரம் பாண்ட்ஸ் கம்பெனி அருகே செல்லும் கால்வாய் ஆகியவற்றின் மூலம் எளிதாக கடத்தக்கூடியா சூழல் இருந்த நிலையில், ஆக்கிரமிப்புகளால் அது கடினமாகிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அப்பகுதி மக்களுக்கு மழை வெள்ளம் பெரிய ஆபத்தாகவும், அச்சுறுத்தலாகவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ள மனுதாரர், இதனால் உயிர் இழப்பு, சேதம், சொத்து அழிவு ஆகியவை ஏற்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்,
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, கால்வாய்கள் ஆய்வு செய்யப்பட்டு 30 ஆக்கிரமிப்புகள் குறித்து தாசில்தார் அறிக்கை சமர்ப்பித்த நிலையில், கிராம நிர்வாக அதிகாரி மூலம் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுவதற்கான அறிவிப்புகளுடன் வெளியிடப்பட்டதாகவும், ஆனால் அடுத்தகட்ட நடவடிக்கை எதும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் pvs Giridar வழக்கறிஞர் Y.கவிதா ஆஜராகி, கால்வாய்கள் குறுகலாவதற்கு வழிவகுக்கும் ஆக்கிரமிப்பு மற்றும் குப்பை கொட்டுவதை அகற்றினால், குரோம்பேட்டை, பல்லாவரம், ஜிஎஸ்டி சாலை ஆகியவற்றில் வெள்ளத்தைத் தடுக்க உதவும் என்றும், என்பதால் தன் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென வாதிட்டார்,
இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கை மனு மீது எடுத்த நடவடிக்கை குறித்து தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியோர் மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர