Admk case today Asmj Nskj bench
அதிமுக கட்சியில் முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு கட்சிக்குள் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து திரு. ஓ. பன்னீர்செல்வம் மற்றும் திரு. எடப்பாடி கே பழனிச்சாமி ஆகியோர் அதிமுக நிறுவனர் டாக்டர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்கள் ஏற்படுத்திய கட்சியின் அடிப்படை விதிகளில் நிறுவனரின் நோக்கத்திற்கு மாறாக தொண்டர்களின் உரிமையை பறித்து தங்களுக்கு சாதகமாக திருத்தம் கொண்டு வந்து சுமார் 2, 300 பொதுக்குழு உறுப்பினர்கள் துணை உடன் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என தங்களை அறிவித்துக் கொண்டும், அவர்கள் இருவருக்கும் பிணக்கு ஏற்பட்ட போது எடப்பாடி கே பழனிச்சாமி தன்னை இடைக்கால பொதுச் செயலாளர் எனவும் தொடர்ந்து பொதுச் செயலாளர் எனவும் அறிவித்துக் கொண்டும் கட்சியின் உண்மையான விசுவாசிகளை கட்சியை விட்டு தங்கள் சுயநலத்திற்காக நீக்கி வந்தனர்.
இவர்கள் கட்சி விதிகளில் கொண்டு வந்த திருத்தங்கள் செல்லாது என அறிவிக்க கோரியும் கட்சி நிறுவனர் டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் ஏற்படுத்திய கட்சி விதிகளை மீண்டும் நடைமுறைப்படுத்தவும், 06.12.2021 அன்று நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தலில் முதலாவது கட்டத்தில் வெற்றி பெற்ற ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் செல்லாது எனும் போது 11.12.2021 முதல் நான்கு கட்டங்களாக 27.04.2023 வரை நடைபெற்ற உட்கட்சி தேர்தல் செல்லாது என அறிவிக்க கோரியும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களின் நீக்கம் செல்லாது என அறிவிக்க கோரியும் திரு. ஓ. பன்னீர்செல்வம் மற்றும் திரு. எடப்பாடி கே பழனிச்சாமி ஆகியோர் மீது கட்சியின் தொண்டர்கள் உரிமையை மீட்க உறுப்பினர்கள் சார்பில் சிவில் வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி கட்சியின் உறுப்பினர்களான வழக்குரைஞர் பா. இராம்குமார் ஆதித்தன் மற்றும் கே. சி. பி. சுரேன் பழனிச்சாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை ஏற்று மாண்புமிகு உயர்நீதிமன்றம் 26.04.2022 அன்று அனுமதி அளித்தது. இந்த அனுமதியை எதிர்த்து திரு. எடப்பாடி கே பழனிச்சாமி மாண்புமிகு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையில் கட்சியில் அடுத்தடுத்து ஏற்பட்ட மாற்றங்களால் அதிமுக தொண்டர்கள் சார்பில் தாக்கல் செய்த உரிமையியல் மனுவில் கோரிய பரிகாரங்கள் காலாவதியாகிவிட்டது எனவும் அதிமுக தொண்டர்கள் சார்பில் வழக்கு தாக்கல் செய்ய பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமிக்கே அதிகாரம் உள்ளது என வாதிட்டனர். கட்சியின் நிறுவனர் டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் ஏற்படுத்திய விதிகள் முழுமையாக அமல்படுத்தவில்லை பொதுச் செயலாளர் பதவிக்கு சாதாரண தொண்டர்கள் போட்டியிடும் நிலையை மாற்றி மாவட்ட செயலாளர்கள் பரிந்துரை செய்பவர்கள் தான் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும் என்று திருத்தியமைக்கப்பட்டுள்ள நிலையில் தொண்டர்கள் உரிமை பறிக்கப்பட்டதாகவும் சுமார் 2 கோடிக்கு மேல் உறுப்பினர்கள் கொண்ட அதிமுக கட்சிக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் சுமார் 88 லட்சம் வாக்குகளே கிடைத்தது. எடப்பாடி கே பழனிச்சாமிக்கு தொண்டர்கள் ஆதரவு இல்லை.
சிவில் வழக்கு நீர்த்துப் போகவில்லை. காலாவதியாகவில்லை. தொண்டர்கள் சார்பில் தாக்கல் செய்துள்ள சிவில் வழக்கு விசாரணைக்கு உகந்தது என்று வாதிட்டதை மாண்புமிகு நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.
மாண்புமிகு ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை எதிர்த்து சிவில் வழக்கு நடத்த அதிமுக தொண்டர்களான வழக்குரைஞர் பா. இராம்குமார் ஆதித்தன் மற்றும் கே. சி. பி. சுரேன் பழனிச்சாமிக்கு மாண்புமிகு தனி நீதிபதி 26.04.2022 அன்று வழங்கிய அனுமதி செல்லுமா என்பது குறித்து இறுதி விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.
இந்த வழக்கில் இன்று 29.08.2025 தீர்ப்பு மாண்புமிகு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் செந்தில் குமார் அமர்வில் வரிசை எண் 1 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது.
