சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகளின் இலாகாக்களை வரும் ஆக.11 முதல் மாற்றியமைத்து தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா உத்தரவிட்டுள்ளார். அதன்படி இதுவரை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரித்து
சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகளின் இலாகாக்களை வரும் ஆக.11 முதல் மாற்றியமைத்து தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி இதுவரை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரித்து
வந்த நீதிபதி பி.வேல்முருகனின் இலாகா மாற்றப்பட்டு முதல் மேல்முறையீடு மற்றும் சிவில் மறுஆய்வு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். இனி எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை நீதிபதி என். சதீஷ்குமார் விசாரிக்கவுள்ளார். குற்றவியல் வழக்குகள் மற்றும் முன்ஜாமீன் வழக்குகளை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனும், இந்துசமய அறநிலையத்துறை, திரைப்படம், மின்வாரியம் தொடர்பான வழக்குகளை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஸூம், சிபிஐ தொடர்பான வழக்குகளை நீதிபதி எம்.நிர்மல்குமாரும், குற்றவியல் மேல்முறையீட்டு வழக்குகளை நீதிபதி ஜி,கே.இளந்திரையனும் விசாரிக்கவுள்ளனர். இதேபோல மேலும் பல நீதிபதிகளின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.