மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி எஸ்.மணிக்குமார் மற்றும் உறுப்பினர் வி.கண்ணதாசன் அடங்கிய அமர்வு, வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ததில், வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் உள்ளிட்டோர், பாதிக்கப்பட்ட சிறுமியின் வாழ்க்கையில் விளையாடி உள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது. மகளிர் போலீசார், சட்டப்படி தங்கள் கடமையை செய்யாமல் புறக்கணித்துள்ளதன் மூலம் மனித உரிமையை மீறியுள்ளனர் என்பது நிரூபனம் ஆகியுள்ளதால், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 9 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
போக்சோ வழக்கை முறையாக விசாரிக்காததால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 9 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட மாநில மனித உரிமை ஆணையம், இந்த வழக்கை டி.எஸ்.பி. அந்தஸ்து அதிகாரியை நியமித்து மீண்டும் விசாரிக்கவும் பரிந்துரைத்துள்ளது. 15 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல்...