மூத்த வக்கீல் சிங்காரவேலன்– சுப்ரீம் தீர்ப்பின் படி ஆகம விதிகளைப் பின்பற்றி தான் தமிழகஅரசு அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்

மூத்த வக்கீல் சிங்காரவேலன் கூறியதாவது-
சுப்ரீம் தீர்ப்பின் படி ஆகம விதிகளைப் பின்பற்றி தான் தமிழகஅரசு அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் ஆனால் தமிழக அரசு ஒராண்டு பயிற்சி பெற்றவர்  களை நியமித்துள்ளது இது சட்டவிரோதமானது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது இது தொடர்பாக நாங்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளோம் எங்களைப் போல் ஏராளமான அர்ச்சகர்களும் தமிழக அரசு விதிமுறை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளது இந்த வழக்கு  2 வாரத்தில் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு களை எடுத்து விரிவாக வாதாட உள்ளோம். சிவாச்சாரியார்கள் சங்கம் தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரித்து தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆகம விதிகளை பின்பற்றி தான் அர்ச்ச கர்களை  நியமிக்க வேண்டும் என்று தெளிவாக தீர்ப்புக் கூறியுள்ளது ஆகமவிதிகள் என்றால் வேதங்களில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் இந்த பயிற்சி இரண்டு ஆண்டு மூன்று ஆண்டு இருக்கும் அவர்கள் கூறியது போல ஓராண்டு பயிற்சி இல்லை  இப்படிப் பயிற்சி பெற்றவர்களை தான் அரசு நியமிக்க வேண்டும் இதற்காக அரசு ஒரு விதிமுறையை திருத்தம் செய்தது தவறானது சட்டவிரோதமானது.
 இவ்வாறு அவர் கூறினார்

You may also like...