நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், நிபந்தனைகள் மற்றும் விதிகளை மீறி செயல்பட்டுவரும் கல் குவாரிகளால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் கவலை அளிக்கக்கூடியதாக இருப்பதாகவும்,

தமிழகத்தில் கல்குவாரிகளை அனுமதிக்கும்போது கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டுமென தமிழக அரசிற்கும், அனுமதிக்கப்பட்ட குவாரிகள் மட்டுமே செயல்படுவதை உறுதி செய்ய கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகாவுக்குட்பட்ட இரண்டு கிராமங்களில் பள்ளிக்கு அருகில் கல் குவாரிகள் செயல்படுவதால், அதிலிருந்து வெளியேறும் தூசி கலந்த புகையில் நச்சுத் தன்மை குழந்தைகளின் உடல் நலத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால், சட்டவிரோதமாக இயங்கும் குவாரிகள், அவற்றிலிருந்து வெளியேறும் நச்சு கலந்த புகை ஆகியவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், நிபந்தனைகள் மற்றும் விதிகளை மீறி செயல்பட்டுவரும் கல் குவாரிகளால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் கவலை அளிக்கக்கூடியதாக இருப்பதாகவும், குறிப்பிட்ட இடம் என்று இல்லாமல் மாநிலம் முழுவதும் விதிமுறைகளை மீறி குவாரிகள் இயங்கிவருவதாகத் தெரிவித்தனர். அனுமதிக்கப்பட்ட கல்குவாரிகள் எவ்வித விதிமீறல்கள் எதுவுமின்றி செயல்படுவதை உறுதி செய்வதோடு, கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டனர்.
நிபந்தனைகளைக் கடைப்பிடித்து அனுமதிக்கப்பட்ட கல்குவாரிகள் மட்டுமே இயங்குவதை உறுதி செய்யும்வகையில் கணக்கெடுப்பு நடத்தி, அதன் அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டனர்.

கல்குவாரிகள் நடவடிக்கைகளை அனுமதிக்கும்போது கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பதன் மூலம், கல்குவாரிகள் அளவைக் கட்டுப்படுத்தலாம் என தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளனர். குவாரிகளில் இருந்து வெளியேறும் தூசிகளில் நச்சுத் தன்மை இருக்கிறதா என்பதையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டும், சம்பந்தப்பட்ட இரு கிராமங்களிலுள்ள பிரச்னை தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டும், வழக்கு விசாரணையை செப்டம்பர் 20ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...