தென்காசி குற்றாலம் மெயின் அருவிப் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது.

[07/05, 16:11] sekarreporter1: தென்காசி குற்றாலம் மெயின் அருவிப் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது.

குற்றாலம் மெயின் அருவி பாறையில் உள்ள பழமையான புடைப்புச் சிற்பங்கள் சேதப்படுத்தப்பட்டதாக மதுரை மாவட்டம் எழுமலையை சார்ந்த இந்து சமய பிரச்சாரகர் இராம. இரவிக்குமார் என்பவரால் தொடரப்பட்ட பொதுநல மனு 06.05.2026 புதன்கிழமை
அன்று விசாரித்த நீதிமன்றம், தற்போதைய நிலையே தொடர வேண்டும் (Status Quo) என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

பின்னர் தமிழக சுற்றுலாத்துறை சார்ந்தவர்கள் முறையிட்டதன் பெயரில் 07.05.2026 இன்று விசாரணைக்கு வந்தது .

மனுதாரர் இராம. இரவிக்குமார்
தரப்பு வழக்கறிஞர் திரு RM.
அருண் சுவாமிநாதன் அவர்கள் வாதிட்டார் 2000 ஆண்டுகளுக்கும் பழமையான புடைப்பு சிற்பங்கள் வளர்ச்சி திட்டம் – மேம்பாட்டு பணிகள் என்கின்ற பெயரில் உடைக்கப்பட்டு இருக்கிறது . அதற்கான போட்டோ புகைப்பட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது . என்ற முறையிட்டார் . மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு துறையை சார்ந்தவர்கள் சமர்ப்பித்த பதில் மனுவில் எந்த விதமான சிலைகளையும் உடைக்கவில்லை சேதப்படுத்த வில்லை என்று குறிப்பிட்டுள்ளது . மாண்புமிகு நீதி அரசர்கள் திரு வேல்முருகன் குமரப்பன் ஆகியோர் அடங்கி அமர்வு உடைக்கப்பட்டதற்கான ஆவணங்கள் இருக்கிறது இதனை அடிப்படையாக ஆதாரமாக வைத்து உள்ள நிலையை தொடர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறோம் .

2000 ஆண்டுகளுக்கும் பழமையான சிலைகளை பாதுகாக்க தவறிய நீங்கள் வளர்ச்சி திட்டத்தை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது தவறு. என்று எச்சரித்தனர் . குற்றாலம் சீசன் தொடங்கிவிடும் ஆகவே அடுத்த வாரம் அறிக்கை தாக்கல் செய்கிறோம் என்று அரசுத்துறை மற்றும் அனைவருக்கும் ஆஜரான வழக்கறிஞர் பெருமக்கள் சொன்னார்கள்.அதற்கு கோடைகால நீதிமன்றத்தை கோடைகால நீதிமன்றமாக நடத்த அனுமதியுங்கள் என்றனர் .

கோடை விடுமுறைக்கு பிறகு முதல் வாரத்தில் இவ்வழக்கில் உள்ள அரசுத்துறை சார்ந்த அனைவரும் பதில்மனு தாக்கல் செய்யுங்கள் .

பின்னர் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் .அதுவரை குற்றாலத்தில் மெயின் அருவியில் உள்ள நிலையே தொடர வேண்டும் . கட்டுமானங்கள் உள்ளிட்ட எந்த பணியும் நடக்கக் கூடாது என்று மிகக் கடுமையாக எச்சரித்து உத்தரவு பிறப்பித்தனர் .

(தடையின் முக்கிய காரணங்கள்:சிற்பங்கள் சேதம்: பாறையில் செதுக்கப்பட்டுள்ள சிவலிங்கம், விநாயகர், முருகன் போன்ற பழமையான புடைப்புச் சிற்பங்கள் சேதமடைந்ததாக புகார் எழுந்தது.முறையற்ற பணிகள்: தொல்லியல் நிபுணர்களின் மேற்பார்வையின்றி, திறமையற்ற தொழிலாளர்களைக் கொண்டு சீர்மமைப்புப் பணிகள் நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.பாதுகாப்பு வளையம் அகற்றம்: சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாதுகாப்பு வளையம் அகற்றப்பட்டதும் விவாதமானது.இதனால், குற்றாலம் மெயின் அருவிப் பகுதியில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன.

#இராமஇரவிக்குமார்
#இந்துதமிழர்கட்சி
#நிறுவனதலைவர்
9655365696
[07/05, 16:11] sekarreporter1: J VelMurugan J Kumarappan

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com