தமிழ்நாடு அரசே! காவல்துறையே! குறிப்பாக கியூ பிரிவு காவல் அதிகாரிகளே!* வழக்கறிஞர்கள், சமூக ஜனநாயகவாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள்

*தமிழ்நாடு அரசே! காவல்துறையே! குறிப்பாக கியூ பிரிவு காவல் அதிகாரிகளே!* வழக்கறிஞர்கள், சமூக ஜனநாயகவாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், அகராதி, மனு, ஜெகன், பிரசன்னா,ராஜா மற்றும் ஈஸ்வரன் ஆகியோர்கள் மீது போடப்பட்ட வழக்கை (குற்ற எண்: 1/2021) இரத்து செய்யப்பட வேண்டும்.

தடா, பொடா, போன்ற கொடூரமான சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு பொய்யாக ஆயிரக்கணக்கான நபர்கள் மீது போடப்பட்டது. தொடர்ந்து பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள், சமூக ஜனநாயகவாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் நடத்திய போராட்டத்தினாலும், பிரச்சாரத்தினாலும் காலாவதியாகிப் போனது.

அதிலுள்ள முக்கியமான சரத்துக்களை எடுத்து பல்வேறு காலகட்டங்களில் சட்ட திருத்தம் செய்து கொடூரமான சிறப்புச் சட்டமாக தேச விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் (UAPA) உருவாக்கப்பட்டது. தற்போழுது இந்த கொடூர சிறப்பு சட்டம் இந்திய அரசியலமைப்பு, குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டங்களுக்கு எதிராகவும், மீறுவதாகவும் அமைந்துள்ளது.

‌தற்பொழுது இந்த கொடூர சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு பொய்யாக பல்வேறு சமூகச் செயற்பாட்டாளர்கள் மீது புனையப்படுகிறது. காஷ்மீரில் குர்ரம் பர்வேஸ் (ஜம்மு காஷ்மீர் குடிமைச் சமூகங்களின் கூட்டமைப்பு-JKCCS) என்ற மனித உரிமை ஆர்வலரின் மீது போடப்பட்டுள்ளது. அதேபோன்று மேற்கண்ட வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஜனநாயக செயற்பாட்டாளர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கியூ- பிரிவால் தவறாக பயன்படுத்தி பொய்யாக போடப்பட்டுள்ளது. எனவே அதை உடனடியாக இரத்து செய்யபட வேண்டும். அவர்களை சோதனை என்ற பெயரில் எந்த தொந்தரவுக்கும் உள்ளாக்கக்கூடாது. மேலும் அவர்களை சட்டப்படி ஜனநாயக முறையில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

இங்ஙனம்,
வழக்கறிஞர்.முனைவர் சுப.மனோகரன் பொதுச் செயலாளர்,
*ஜனநாயக உரிமை பாதுகாப்பு பேரவை (OPDR).*

You may also like...