தமிழகத்தின் மூத்த செய்தியானரும், சத்யாலயா நியூஸ் சர்வீஸ் அட்மினுமான சத்யாலயா இராமகிருஷ்ணன் மீது முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சார்பில் போடப்பட்ட 1 கோடி ரூபாய் மான நட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

தமிழகத்தின் மூத்த செய்தியானரும், சத்யாலயா நியூஸ் சர்வீஸ் அட்மினுமான சத்யாலயா இராமகிருஷ்ணன் மீது முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சார்பில் போடப்பட்ட 1 கோடி ரூபாய் மான நட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
2006 காலகட்டத்தில், அரசியல் எரிமலை என்ற நாளேட்டின் ஆசிரியராக சத்யாலயா இராமகிருஷ்ணன் பணியாற்றினார்.
அப்போது அந்த நாளிதழில் சென்னை விமான நிலைய வெளிநாட்டு முனையத்தில் உள்ள சுங்கத்துறையில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் மற்றும் லஞ்ச லாவண்யங்கள் பற்றி செய்திகள் வெளியிடப்பட்டன.
இந்த செய்திகளால் அன்று மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் நன்மதிப்பிற்கு பங்கம் ஏற்பட்டுவிட்டது என்று கூறி, அப்போது சென்னை சுங்கத்துறை கமிஷனராக இருந்த ராஜன் என்பவர் சத்யாலயா மீது 1 கோடி ரூபாய் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மான நட்ட வழக்கு தொடர்ந்தார்.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சார்பில் வழக்கு தொடர்வதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு கடந்த 15 ஆண்டுகளாக உயர்நீதிமன்றத்தின் பல்வேறு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தன.
மானம் போனதாக கூறிய சிதம்பரமோ. அவர் சார்பில் வழக்கு போட்ட ராஜனோ தங்கள் தாப்பு நியாயங்களை நீதிமன்றத்தில் எடுத்து வைக்க முன்வரவில்லை.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதியரசர் நக்கீரன் முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கம்போல் இன்னும் மனுதாரர்களான ப.சிதம்பரம் மற்றும் ராஜன் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.
இதையடுத்து, மூத்த செய்தியாளர் சத்யாலயா இராமகிருஷ்ணன் மீது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தொடர்ந்த மான நட்ட வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி நக்கீரன் உத்தரவிட்டார்.
வழக்கு மனுவில் பல்வேறு தவறுகள் மற்றும் குளறுபடிகள் உள்ளதால் வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
சத்யாலயா இராமகிருஷ்ணன் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.மணிமுத்து மற்றும் வழக்கறிஞர் அருள்ராஜ் ஆகியோர் ஆஜரானார்கள்.

You may also like...