அஇஅதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நடத்தப்படவிருக்கின்ற முன்னாள் தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி சிறப்புரையாற்றும் மே தினப்பொதுக்கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல்துறை அனுமதி அளிக்காமல் இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில் மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதன்பேரில் மாண்பமை நீதிமன்றம் கொரோனா விதிமுறைகள் பின்பற்றி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது

    [4/29, 19:41] Sekarreporter: [4/29, 19:41] Sekarreporter: அஇஅதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நடத்தப்படவிருக்கின்ற முன்னாள் தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி சிறப்புரையாற்றும் மே தினப்பொதுக்கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல்துறை அனுமதி அளிக்காமல் இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில் மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதன்பேரில் மாண்பமை நீதிமன்றம் கொரோனா விதிமுறைகள் பின்பற்றி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி A. D. ஜெகதீஷ் சந்திரா அவர்கள் முன்பு முன்னாள் அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் திரு. P. H. அரவிந்த் பாண்டியன் மற்றும் முன்னாள் அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் திரு. M. ஜோதிக்குமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.
    [4/29, 19:41] Sekarreporter: 💐💐🌹🌹
    [4/29, 19:42] Sekarreporter: பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மே தின பொதுக்கூட்டத்தை நடத்த அதிமுக-விற்கு அனுமதித்துள்ள உயர் நீதிமன்றம், போதிய பாதுகாப்பை வழங்க கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக அதிமுக விழுப்புரம் நகர செயலாளர் எம்.பாபு என்பவர் தொடர்ந்த வழக்கில், மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தன்று மே தின பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவுறுத்தியதன் பேரில், அதிமுக மற்றும் அதிமுக தொழிற்சங்க பேரவை இணைந்து கள்ளக்குறிச்சியில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள முத்துசாமி என்பவரின் இடத்தில் மே தின கொண்டாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு அனுமதி கோரி ஏப்ரல் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரிடம் விண்ணப்பித்ததாக குறிப்பிட்டுள்ளார். அந்த விண்ணப்பத்தை பரிசீலிக்காமல் காவல்துறை அலைக்கழிக்கப்படுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே தனியார் நிலத்தில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மே தின கொண்டாட்டங்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கும்படி கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி-க்கும் ஆய்வாளருக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும், அனுமதி பெற்று வைக்கப்படும் பேனர்கள் பதாகைகள் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது, சாலையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அதிமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். இந்த கூட்டத்திற்கு உரிய பாதுக்காப்பை வழங்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளார்.

You may also like...