ஏர்போர்ட் மூர்த்தி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மனு தாக்கல் செய்துள்ளார்.

கொலை முயற்சி வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மனு தாக்கல் செய்துள்ளார்.

புரட்சி தமிழகம் கட்சி தலைவராக இருப்பவர் ‘ஏர்போர்ட்’ மூர்த்தி. இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்தும் அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார். சென்னை மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி. அலுவலக நுழைவுவாயில் அருகே கடந்த 6 ஆம் தேதி நின்றுக்கொண்டிருந்த அவரை சுற்றி வளைத்து விடுதலை சிறுத்தை கட்சியினர் தாக்கியதாகவும், இதனையடுத்து ஏர்போர்ட் மூர்த்தியும் பதில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக இரு தரப்பினரும் காவல்துறையில் புகார் அளித்தனர்.

விடுதலை சிறுத்தை கட்சியினர் அளித்த புகாரில் சென்னை மெரினா கடற்கரை காவல்துறை ஏர்போர்ட் மூர்த்திக்கு எதிராக ஆபாசமாக பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்நிலையில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தான் ஒரு அப்பாவி, அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் நமக்கு எதிராக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. என்னை தாக்கியது தொடர்பாக நான் அளித்த புகாரில் எதிர் தரப்பில் யாரையும் கைது செய்யவில்லை ஆனால் எனக்கு எதிராக மட்டுமே கைது நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டு உள்ளது. தவறான பொய் புகாரில் காவல்துறை தன்னை கைது செய்துள்ளது. தனக்கு எதிரான குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கின்ற நிபந்தனைகளை ஏற்ப தயாராக இருப்பதாகவும் எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com