Temple order நீதிபதிகள் சுரேஸ்குமார், சவுந்தர்

திருவண்ணாமலை கோயில் ராஜகோபுரம் எதிரே உள்ள கடைகளை அப்புறுப்படுத்தினர். அந்த இடத்தில் ஒரு வணிகவளாகம் கோயில் பணம் ரூ. 6 கோடியே 25 லட்சம் செலவும் கட்டப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து கோயில் ஆர்வலர் டி.ஆர்.ரமேஸ் சென்னை ஐகோட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஐகோர்ட் விசாரித்து வணிக வளாகம் கட்ட தடை விதித்தது. இதை தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஸ்குமார், சவுந்தர் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது டி.ஆர்.ரமேஸ் ஆஜராகி, கோயில் நிதியில் இருந்து வணிகவளாகம் கட்டக்கூடாது. ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார். அப்போது வணிகர்கள் சார்பாக மூத்த வக்கீல் வில்சன் ஆஜராகி, வணிக வளாகம் கட்டி தருவதாக கூறி திருவண்ணாமலை ராஜகோபுரம்அருகே கடை வைத்துள்ள எங்கள் கடைகளை காலி செய்துவிட்டனர். த்றபோத அரசு மாற்றி கூறுவதை ஏற்க கூடாது. அரசாணையின்படி கடை கட்ட அனுமதிக்க வேண்டும் என்றார்.

அப்போது இந்து அறநிலையத்துறை வக்கீல் அருண் நடராஜன் ஆஜராகி, வணிக வளாகம் கட்டுவதற்கு பதில் பக்தர்கள் காத்திருக்கும் மண்டம் கட்ட திட்டமிட்டுள்ளோம் என்று கூறி ஒரு வரைபடத்தை தாக்கல் செய்தார்.

அப்போது மனுதாரர் ரமேஸ் ஆஜராகி, திருவண்ணாமலை ஒரு புரதான ஆயிரம் ஆண்டுகளாக உள்ள ராஜகோபுரம் கோயில். இப்படி 100 ஆண்டுகளுக்குமேல் உள்ள புரதான கோயில் சின்னங்களை பாதுகாக்க தற்போது தமிழக அரசு புரதான சின்னங்கள் பாதுகாப்பு கமிட்டி அமைத்து அதற்கு ஐகோர்ட் உத்தரவின்படி சட்டமும் இயற்றியுள்ளது. இத்தகைய நிலையில் வணிக வளாகம் கட்ட ஒரு செங்கலை கூட வைக்க முடியாது. புரதான சின்னங்கள் பாதுகாப்பு சட்டப்படி திருவண்ணாமலையில் உள்ள நகராட்சி, பஞ்சாயத்தில் அனுமதி பெற்று, அதன்பிறகு இந்த புரதாண சின்ன பாதுகாப்பு கமிட்டியிடம் ஒப்புதல் பெற வேண்டும். இது எல்லாம் அவ்வளவு சீக்கரம் முடிய கூடியது இல்லை. எனவே அரசு தாக்கல் செய்த வரைபடத்தை ஏற்க கூடாது என்றார்.

பின்னர் அரசு வக்கீல் தாக்கல் செய்த வரை படத்தை பார்த்த பிறகு அதில் பல குறைபாடுகள் உள்ளது.என்ஜினியர் தயாரித்த வரைபடத்தை தாக்கல் செய்யுங்கள் அதன்பிறகு பார்க்கலாம் என்று உத்தரவிட்டு. தற்போது இந்து அறநிலையத்துறை தாக்கல் செய்த வரைபடத்தை நிராகரிக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version