மூத்த வக்கீல் சிஎஸ்.வைத்தியநாதன் ஆஜராகி, கனகசபை முன் அனைவரும் ஏறி தரிசனம் செய்ய முடியாது.

சிதம்பரம் சபாநாயகர் கோயில் கனகசபை வழக்கு நீதிபதிகள் ஆர். சுரேஸ்குமார், சவுந்தர் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அபபோது சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் சார்பாக மூத்த வக்கீல் சிஎஸ்.வைத்தியநாதன் ஆஜராகி, கனகசபை முன் அனைவரும் ஏறி தரிசனம் செய்ய முடியாது. அது சிறிய இடம், புனிதமாக இடம். மதரீதியாக அந்த இடத்தில் தீட்சிதர்கள் ஏறி ஆறு கால பூஜையை செய்து வருகிறார்கள்.சந்திரமவுலீஸ்வருக்கு இது நடக்கும். இது தெய்வீக மான இடமாகும். இதில் விஐபிகளை மட்டும் அனுமதித்து தரிசனம் செய்து வைக்கலாம். அனைவரும் ஏறி தரிசன்ம செய்ய முடியாது. இதுதொடர்பாக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் , கனகசபை மீது அனைவரும் ஏற அனுமதிக்க வேண்டும்என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்யக்கூடாது என்றார்.

இதை கேட்ட நீதிபதிகள் , ஒரு வேளை அரசாணை ரத்து செய்யப்பட்டால் அடுத்தது தீட்சிதர்கள் என்ன செய்வார்கள். யார் யாரை விஐபியாக கருதி அனுமதிப்பார்கள் என்று ஒரு திட்டம் வகுத்து அடுத்த மாதம் 9ம் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு அரசு பதில் அளிக்க என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார். கனகசபை மீது அனைவரையும் அனுமதிக்க கூடாது என்று டி.ஆர்.ரமேஸ் வாதாடினார். இதையும் நீதிபதிகள் பதிவு செய்தனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version