sekarreporter1: https://x.com/i/status/2067603762169184364 [18/06, 19:13] sekarreporter1: ,#Jananayagan #leekage case. Anticipatory Bail filed by pradeep Kumar dismissed by Justice Kumarapan. Advocate Vijayan Subramanian appeared for KVN Productions.

[19/06, 10:20] sekarreporter1: [18/06, 19:13] sekarreporter1: https://x.com/i/status/2067603762169184364
[18/06, 19:13] sekarreporter1: ,#Jananayagan #leekage case. Anticipatory Bail filed by pradeep Kumar dismissed by Justice Kumarapan. Advocate Vijayan Subramanian appeared for KVN Productions.
[19/06, 17:55] sekarreporter1: முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரியில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தணிக்கை பிரச்னையால் அப்படம் வெளியாகவில்லை. தணிக்கை வாரியத்தின் மறுஆய்வு குழு முன்பாக நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஜனநாயகன் படம் கடந்த ஏப்.3 அன்று சட்டவிரோதமாக இணையத்தி்ல் வெளியானது. இதுதொடர்பாக படத்தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்க்ஷன்ஸ் அளித்த புகாரின் பேரில் சென்னை சைபர் க்ரைம் போலீஸார் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்துள்ளனர். இன்னும் சிலரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வரும் பிரதீப்குமார் என்பவர் தனக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சி.குமரப்பன் முன்பாக நடந்தது. அப்போது படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், மனுதாரரான பிரதீப்குமாருக்கு முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவி்த்தார். அதையடுத்து பிரதீப்குமாரி்ன் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version