Rskj bench அதிரடி உத்தரவு 2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடி பணி நியமனம் :

2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடி பணி நியமனம் :

தமிழகத்தில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பணியி டங்களுக்கு நேரடித் தேர்வு நடத்தி 2 ஆயிரத்து 500 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் இவர்கள் பணி நியமனம் செய் யப்படவில்லை.

இதற்கிடையே இடமாற்றம் மூலம் பணி மாறுதல் (2 சதவீதம்) கோரி அமைச்சுப் பணியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கை கடந்த மாதம், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து, 2 சதவீத இடத்தை இவர்களுக்கு ஒதுக்கீடு செய்யா மல், நேரடி பணி நியமனம் செய்யக்கூடாது என்று தீர்ப்பு வழங்கினார்.

இதை எதிர்த்து நேரடி பணி நியமனத்துக்கு தேர்வு செய்யப் பட்டவர்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அப்பீல் வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஹேமந்த் சந்திரகவுடர் ஆகியோர்

முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நேரடி நியமனங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் சார் பாசு மூத்த வக்கீல் தாட்சாயணி ஆஜராகி, “2 ஆயிரத்து 500 பேர் நேரடியாகப் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனத்துக்காக காத்திருக்கின்றனர். தனி நீதிபதி உத்தரவால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளர். எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து 2 ஆயிரத்து 500 பேருக்கு நியமனம் வழங்க வேண்டும்” என்று கூறினார்.

அப்போது தமிழக அரசின் சார்பில் அரசின் தலைமை வழக்கறிஞர் திரு.
ராமன் அவர்கள் அரசு சிறப்பு வக்கீல் திருமதி.மைத்ரேயி சந்துரு ஆகியோர் ஆஜராகி, நேரடியாகப் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் தயாராக உள்ளன” என்றனர்.

இதைக்கேட்ட நீதிபதிகள், -நேரடி நியமனங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 2 ஆயிரத்து 500 பேருக்கு அரசு பணி நியமன உத்தரவுகளை உடனே வழங்கலாம்” என உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்து, பணி நியமனம் செய்தது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version