RTI case Grsj bench கூறியது சரியா தவறா?
“RTE இடங்களுக்கான நிதி ரூ 342.69 கோடியை ஒன்றிய அரசு பாக்கி வைத்திருக்கும் நிலையில், இந்த கல்வி ஆண்டுக்கும் தமிழ்நாடு அரசே செலவினங்களை ஏற்க சொன்னது தவறு” என உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் P.வில்சன் வாதம்
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீட்டிற்கான நிதியை பெறுவது தொடர்பான தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு வழக்கு குறித்து, அரசு தரப்பில் ஆஜரான திமுக எம்.பி.-யும், மூத்த வழக்கறிஞருமான P.வில்சன் அவர்களிடம் ஐகோர்ட் நிருபர் K.முகேஷ் எடுத்த பேட்டி….
நிருபர் : RTE தொடர்பாக சென்னை உயஎ நீதிமன்றத்தின் எந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது?
வக்கீல் P. வில்சன் : கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீட்டிற்கான நிதியை மாநில அரசே உடனடியாக வழங்க வேண்டும் என்ற சென்னை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட் டுள்ளது.
நிருபர் : சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து எதற்காக மேல்முறையீடு செய்யப்பட்டது?
வக்கீல் P. வில்சன் : RTE சட்டத்தின் கீழ் நிதி வழங்குவதில் ஒன்றிய அரசும், மாநில அரசும் சம பங்கினைக் கொண்டுள்ளன. ஆனால் இந்த செலவினங்களுக்கு மாநில அரசாங்கமே முக்கிய பங்கினை வகிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது தவறு என்பதால், தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. அதனாலேயே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
நிருபர் : தமிழ்நாடு அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் என்ன?
வக்கீல் P. வில்சன் : 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான முழுச் செலவினத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது, ஆனால் ஒன்றிய அரசும் இந்த செலவுகளுக்கு பங்களிக்க உத்தரவிட்டிருக்க வேண்டும் என்று வாதிட்டேன்.
நிருபர் : இந்த கல்வி ஆண்டுக்கான நிதி தான் வரவில்லையா? அல்லது ஒன்றிய அரசு பாக்கி வைத்துள்ளதா?
வக்கீல் P. வில்சன் : ஏற்கனவே 2021-2022 மற்றும் 2022-2023ஆம் கல்வி ஆண்டுகளுக்கான ஒன்றிய அரசின் 60 சதவிகித பங்களிப்பான 342 கோடியே 69 லட்ச ரூபாயை இதுவரை வழங்கவில்லை. அதையும் உச்ச நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுசென்றேன். அந்த கல்வியாண்டுகளுக்கான செலவினங்களையும் தமிழ்நாடு அரசே செலவிட்டுள்ளதையும் குறிப்பிட்டு வாதிட்டேன்.
நிருபர் : தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கில் என்ன முன்னேற்றம் ஆனது?
வக்கீல் P. வில்சன் : தமிழ்நாடு அரசு தரப்பில் நான் முன்வைத்த வாதங்களுக்கு பிறகு, மேல்முறையீடு வழக்கு குறித்து ஒன்றிய அரசு 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
