நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, அந்த பணி நியமன உத்தரவு போலி என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பேரூராட்சி செயல் அலுவலரும், இதுபோல எந்த நியமன உத்தரவையும் வழங்கவில்லை என திட்டவட்டமாக மறுத்தார்.
போலி பணிநியமன உத்தரவை தாக்கல் செய்த விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி, திருப்பூர் டி.எஸ்.பி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், முத்தூர் பேரூராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இயக்குவதற்காக நியமிக்கப்பட்ட தன்னிடம், பேரூராட்சி தலைவர் 3 லட்சத்து 75 ஆயிரம்...