Navj அதிரடி உத்தரவு கோயில் நிலத்தை ரூ.18 கோடிக்கு சென்னை மாநகராட்சி பள்ளிக்கு விற்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கோயில் நிலத்தை ரூ.18 கோடிக்கு சென்னை மாநகராட்சி பள்ளிக்கு விற்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் மாநகராட்சி பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகே உள்ள பெருமாள் கோயில் நிலம் 10 கிரவுண்டை பயன்படுத்தி வருகிறது. இந்த பள்ளிக்கு கோயில் நிலம் 1937ம் ஆண்டு குத்தகை்கு விடப்பட்டு பின்னர் ஆண்டு வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த கோயிலுக்கு தர வேண்டிய வாடகை பாக்கியை தர கோரி இந்து அறநிலையத்துறை சார்பாக சென்னை ஐகோர்ட்டில் மாநகராட்சி பள்ளி மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஸ் விசாரித்து , மாநகராட்சி பள்ளியில் 2500 மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் நலன் கருதி இனிமேல் வாடகை எதுவும் கேட்காமல் கோயிலுக்கு சொந்தமான 10 கிரவுண்ட நிலத்தை ரூ. 18 கோடியே . 85 லட்சத்துக்கு மாநகராட்சிக்கு விற்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதுபற்றி நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. இதை பார்தத நீதிபதி கோயில் நிலத்தை பள்ளி பெறருக்கு விற்க பத்திரபதிவு செய்து அதை கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட்டர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version