Madurai Srinivas Ragavan: சொல்வதெல்லாம் உண்மை – 14 —— ஸ்ரீநிவாச ராகவன் S

[4/24, 06:44] Madurai Srinivas Ragavan: சொல்வதெல்லாம் உண்மை – 14
——
ஸ்ரீநிவாச ராகவன் S

இப்போதெல்லாம் நாம் அரசுக்கும் பற்பல தனியார் துறைகளுக்கும் எப்போது எத்தொகையைச் செலுத்தினாலும் அதன் விபரம் அவரவர் அலைபேசிக்கு உடனே குறுஞ்செய்தியாகவோ அல்லது மின்னஞ்சலாகவோ வந்துவிடுகிறது.

உதராணமாக சமையல் வாயு, மின்கட்டணம், வீட்டுவரி, தண்ணீர் வரி, வங்கியில் பணம் போட்டாலும் எடுத்தாலும், கடன் அட்டை வழியிலான வரவு, செலவுகள், அலைபேசிப் பயன்பாடு கட்டணம் கட்ட அல்லது ரீசார்ஜ் செய்தல், LIC ப்ரிமியம் பணம் கட்டினாலும், குடிமைப் பொருட்களை வாங்கினாலும் உடனே அந்த விவரங்கள் அலைபேசியில் குறுஞ்செய்தியாக வருகின்றன.

கேபிள் டி.வி.க்கான கட்டணம் கட்ட ஒரு மொபைல் ஆப்-ஐ தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு இத்தகைய தகவல்களைத் தருகின்றன.

தமிழ்நாடு முழுதும் சாலை விதிகளை மீறினாலும் வேறு சில சிறு குற்றங்களுக்கும் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் காவல் துறையினர் அபராதம் வசூலிக்கிறார்கள்.

ஸ்பாட் ஃபைன் விவரங்கள் நமக்குத் தெரிவிக்கப்படுகின்றது. குறுஞ்செய்தி வருகிறது. செயலியிலும் தெரியும்.

நியாயவிலைக் கடைகளில் ரூ.12/-க்கு பொருட்கள் வாங்கினால் அதற்கும் கூட ஒரு குறுஞ்செய்தி வருகிறது.

ஆனால் நீதித்துறையில்?

நீதிமன்றத்தில் வழக்காடிகளால் செலுத்தப்படும் நீதிமன்றக் கட்டணமும் அபராதத் தொகைகளும் சம்பந்தப்பட்ட வழக்காடிகளுக்கு எவ்வகையிலும் தெரிவிக்கப்படுவதில்லை.

ஒவ்வொரு நாளும் செலுத்தப்படும் நீதிமன்றக் கட்டணத் தொகை கோடியைத் தாண்டும். அபராதம் லட்சங்களைத் தாண்டும்.

வழக்கறிஞர்கள் சமூகம் தனது கட்சிக்காரர்களிடம் ஒரு வழக்கிற்கு தான் செலுத்திய நீதிமன்றக் கட்டணம் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கிறார்களா என்றால் பெரும்பாலும் கிடையாது.

நீதிமன்றம் அதற்கு ரசீது தருவதும் இல்லை.

குற்றவியல் நீதிமன்றங்களில் செலுத்தப்படும் அபராதமும் சிவில் வழக்குகளி்ல் செலுத்தப்படும் court fee மற்றும் costs என்ற செலவுத் தொகைகளும் இப்படித்தான் வழக்காடிகளுக்கு தெரியாமல் போகின்றன.

நீதித்துறையும் அந்தத் தொகை குறித்த விவரங்களை அலைபேசியில் குறுஞ்செய்தி வாயிலாக வழக்காடும் பொதுமக்களுக்குத் தெரிவிப்பது உடனடித் தேவை.

அதுவே வெளிப்படையான நிர்வாகத்திற்கு முதல் படி.

செய்வார்களா?
[4/24, 06:59] Sekarreporter: 💐

You may also like...