Madras high. Court sep 27th order

[9/27, 10:55] Sekarreporter1: #RSS ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்ப பெறக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி மறுப்பு

அனுமதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக வேண்டுமானால் மேல்முறையீடு செய்ய நீதிபதி அறிவுரை. #MadrasHC
[9/27, 10:59] Sekarreporter1: தனி நீதிபதி அவச வழக்காக விசாரிக்க மறுத்ததை அடுத்து, தனது வழக்கை விசாரணைக்கு எடுக்க கோரி திருமாவளவன் தரப்பில் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. கிருஷ்ணகுமார் அமர்வில் முறையீடு

மேல்முறையீடாக தான் தாக்கல் செய்யமுடியும் என நீதிபதிகள் விளக்கம்
[9/27, 11:18] Sekarreporter1: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி மறுத்துவிட்டார். மேல்முறையீடு மனுவாக தாக்கல் செய்ய பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர் எஸ் எஸ் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்பு ஊர்வலத்திற்கு செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் அனுமதி அளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், மத நல்லிணக்கத்தை குலைத்து பிரித்தாளும் கொள்கையை பின்பற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க கூடாது, விஜய தசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது, அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவளராக சித்தரிக்க முயற்சிக்கிறது என்ற குற்றம்சாட்டியுள்ளார்.

அக்டோபர் 2 ஆம் தேதி வி.சி.க சார்பில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடத்த உள்ளதாகவும் திருமாவளவன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக இன்று அல்லது நாளை விசாரிக்க வேண்டும் என திருமாவளவன் தரப்பில் நீதிபதி இளந்திரையன் முன்பு அவசர முறையீடு செய்யப்பட்டது. ஆனால் நீதிபதி, ஏற்கனவே உத்தரவிட்ட வழக்கில் மனுதாரராகவோ அல்லது எதிர் மனுதாரராகவோ இல்லாத போது இந்த மனுவை எப்படி விசாரிக்க முடியும் என கேள்வி எழுப்பி, அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டார்.

மனுவின் எண்ணிடும் நடைமுறைகள் முடிந்த பின்னர் விசாரிக்கப்படும் எனவும், தேவைப்பட்டால் அனுமதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக வேண்டுமானால் மேல்முறையீடு செய்யுங்கள் என திருமாவளவன் தரப்பிற்கு அறிவுறுத்தினார்.

தனது மனுவை தனி நீதிபதி அவசர வழக்காக விசாரிக்க மறுத்ததை அடுத்து திருமாவளவன் தரப்பில், பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. கிருஷ்ணகுமார் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் நீதிபதிகள், திருமாவளவன் கோரிக்கை குறித்து மேல்முறையீடாக தான் தாக்கல் செய்யமுடியும் என விளக்கம் அளித்துள்ளனர்.
[9/27, 11:41] Sekarreporter1: வீடியோ கால் மூலம் மருத்துவருடன் பேசி செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்த விவகாரத்தில் ஆறு வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய பொது சுகாதாரத்துறை இயக்குனருக்கு உத்தரவு.

– மாநில மனித உரிமை ஆணையம்.
[9/27, 11:45] Sekarreporter1: வீடியோ கால் மூலம் மருத்துவருடன் பேசி செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்த விவகாரம் தொடர்பாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய பொது சுகாதாரத்துறை இயக்குனருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு அருகே உள்ள ஆண்டார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முரளி என்பவரின் மனைவி புஷ்பா, பிரசவத்திற்காக மதுராந்தகம் அருகே உள்ள இல்லீடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் இல்லாததால், செவிலியர்கள் மருத்துவரை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசி பிரசவம் பார்த்ததாக தெரிகிறது. இதில் புஷ்பாவுக்கு பிறந்த குழந்தை சிறிது நேரத்தில் இறந்துவிட்டது.

இதை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய பொது சுகாதார துறை இயக்குனருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
[9/27, 14:08] Sekarreporter1: தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் கோவில் திருட்டு வழக்கு தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத காவல்துறையினருக்கு 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம், பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவில் சிலைகள் மற்றும் தகடுகள் திருட்டு தொடர்பாக வெங்கட்ராமன் என்பவர் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புகார் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டது.

இதனையடுத்தும் உரிய விசாரணை நடத்தாமல், புகார் அளித்த தன்னை விசாரணை என்ற பெயரில் அலைகழித்தாக வெங்கட்ராமன் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், பந்தலூர் காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர்கள் ஜெயமோகன், சிந்து நதி மற்றும் பகவதி சரணன் ஆகியோர் மீது குற்றம்சாட்டியிருந்தார்.

வெங்கட்ராமனின் புகாரை விசாரித்த மனித உரிமை ஆணையம், திருட்டு தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் குறித்து நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரை அலைக்கழித்து மன உளைச்சலை ஏற்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, பாதிக்கப்பட்ட வெங்கட்ராமனுக்கு 3 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது.

இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் மூவரிடம் இருந்தும் தலா ஒரு லட்சம் ரூபாய் வசூலிக்கவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
[9/27, 15:28] Sekarreporter1: கோவை ஈஷா அறக்கட்டளையால் கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. கிருஷ்ணகுமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில், கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள், மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து ஈஷா அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், சட்டத்தை உருவாக்கிவிட்டு பின்னர் அதிலிருந்து விலக்கு அளிப்பதா என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியதுடன், ஈஷா அறக்கட்டளையின் கட்டடங்கள் எவ்வாறு விலக்கு அளிக்கும் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டன என விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு ((செப்டம்பர் 28)) தள்ளிவைத்தனர்.
[9/27, 16:06] Sekarreporter1: முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டிய விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த இரண்டு நபர்களுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது

வடசென்னை பகுதியில் கடந்த 11ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் சுவரொட்டி ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக துறைமுகம் கிழக்கு பகுதி கிளை செயலாளர் ராஜசேகர் அளித்த புகாரில் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மண்ணடியை சேர்ந்த ஆறுமுகம், ரமேஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது

காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் வினோத் ராஜ் ஆஜராகி இந்த புகாரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்தான் இந்த சுவரொட்டிகளுக்கு நிதி உதவி செய்ததாக ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், மேலும் இந்த விவகாரத்தில் பின்புலமாக உள்ளவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாகவும் தெர்வித்தார்.

மீண்டும் இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது

வழக்கில் முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மண்ணடியை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் ரமேஷ் ஆகியோர் இனி இது போன்ற செயலில் ஈடுபாடு மாட்டோம் என்று நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்கள்

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி,மூன்று வார காலம் மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார் .
[9/27, 16:21] Sekarreporter1: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு விசாரணைக்கு பெற்றோர் ஒத்துழைப்பதில்லை…

மரபணு சோதனைக்கு மாதிரிகளை தர மாணவியின் பெற்றோர் மறுக்கிறார்கள்…

சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு…

மாணவி பயன்படுத்திய மொபைல் போனை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க பெற்றோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…

மாணவி மரண வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை அறிக்கையை அக்டோபர் 30ல் தாக்கல் செய்ய சிபிசிஐடி க்கு உத்தரவு…

விசாரணை அக்டோபர் 30க்கு தள்ளிவைப்பு…
[9/27, 16:21] Sekarreporter1: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு விசாரணைக்கு பெற்றோர் ஒத்துழைப்பதில்லை என்று சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, புலன் விசாரணையை விரைந்து மேற்கொண்டு விரைவில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கை மாற்றக்கோரி கோரிக்கை விடுத்த நிலையில் வழக்கு தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருவதால் இந்த மனுவை ஏன் முடித்து வைக்க கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், உயர்நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை கண்காணித்து வருகிறது. ஏற்கனவே இரண்டு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும், வழக்கு தொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பான வீடியோ காட்சிகள் அடங்கிய குறுந்தட்டை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஏற்கனவே, இந்த வழக்கின் புலன் விசாரணை முடியும் வரை வழக்கு தொடர்பான ஆவணங்களை மாணவியின் பெற்றோர் தரப்புக்கு வழங்க கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளதை சுட்டிக்காட்டிய அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், வழக்கின் புலன் விசாரணைக்கு மாணவியின் பெற்றோர் ஒத்துழைக்க மறுப்பதாகவும் விடுதியில் மாணவி பயன்படுத்திய மொபைல் ஃபோனை வழங்க மறுப்பதாகவும் மரபணு சோதனைக்கு மாதிரிகள் வழங்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, மாணவி செல்போன் பயன்படுத்தி இருந்தால் அதை புலன் விசாரணை செய்யும் சிபிசிஐடி போலீசாரிடம் வழங்க வேண்டும் என மாணவியின் பெற்றோருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையின் முன்னேற்றம் குறித்து அடுத்த அறிக்கையை அக்டோபர் 30ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்
[9/27, 16:38] Sekarreporter1: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு விசாரணைக்கு பெற்றோர் ஒத்துழைப்பதில்லை என்று சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, புலன் விசாரணையை விரைந்து மேற்கொண்டு விரைவில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கை மாற்றக்கோரி கோரிக்கை விடுத்த நிலையில் வழக்கு தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருவதால் இந்த மனுவை ஏன் முடித்து வைக்க கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், உயர்நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை கண்காணித்து வருகிறது. ஏற்கனவே இரண்டு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும், வழக்கு தொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பான வீடியோ காட்சிகள் அடங்கிய குறுந்தட்டை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஏற்கனவே, இந்த வழக்கின் புலன் விசாரணை முடியும் வரை வழக்கு தொடர்பான ஆவணங்களை மாணவியின் பெற்றோர் தரப்புக்கு வழங்க கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளதை சுட்டிக்காட்டிய அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், வழக்கின் புலன் விசாரணைக்கு மாணவியின் பெற்றோர் ஒத்துழைக்க மறுப்பதாகவும் விடுதியில் மாணவி பயன்படுத்திய மொபைல் ஃபோனை வழங்க மறுப்பதாகவும் மரபணு சோதனைக்கு மாதிரிகள் வழங்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, மாணவி செல்போன் பயன்படுத்தி இருந்தால் அதை புலன் விசாரணை செய்யும் சிபிசிஐடி போலீசாரிடம் வழங்க வேண்டும் என மாணவியின் பெற்றோருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையின் முன்னேற்றம் குறித்து அடுத்த அறிக்கையை அக்டோபர் 10ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்
[9/27, 17:00] Sekarreporter1: அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி சசிகலா தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை இறுதி விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அதிமுக பொது செயலலராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் பொது செயலாளராக வி.கே.சசிகலாவும், துணை பொது செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுத்துள்ளதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது.

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொது செயலாளர் இல்லாமல் கூட்டபட்ட பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரியும், அதில் தங்களை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தன்னை பொதுச் செயலாளராக அறிவித்து 2016 டிசம்பர் 29ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கட்சி உறுப்பினர்கள் என்ற முறையில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரையும் கட்டுப்படுத்தும் எனவும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் எனவும் அறிவிக்க வேண்டுமென சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

சசிகலாவின் இந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி, சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் எனவும் இந்த வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனவும் கூறி, சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், முழுமையாக விசாரணை நடத்தாமலும், தனது தரப்பு வாதங்களையும் முழுமையாக கேட்காமல் வழக்கை நிராகரித்தது தவறு எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்ப நிலையிலேயே வழக்கை நிராகரிக்க முடியாது என்பதால், தனது வழக்கை நிராகரித்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இறுதி விசாரணைக்காக வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென இரு தரப்பிலும் கேட்டுக்கொள்ளப்பட்டது

அப்போது, அவசரமாக இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர் அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென தெரிவித்தார்.

இதனையடுத்து, இறுதி விசாரணைக்காக வழக்கை அக்டோபர் 26ம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்தார்.
[9/27, 17:00] Sekarreporter1: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம். மையத்தில் ஸ்கிம்மர் வைத்த வாலிபரின் தந்தைக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏடிஎம் மையத்தில் ஸ்கிம்மர் கருவி மற்றும் ரகசிய கேமரா பொருத்தி வாடிக்கையாளர்களின் தகவல் திருடியதாக கிளை மேலாளர் அளித்த புகாரில் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் ஸ்கிம்மர் பொருத்திய இளைஞர் ஆனந்த்குமார் மற்றும் அவரது தந்தை மனோகர் குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி மனோகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், தனது மகனின் செயல் குறித்து தனக்கு தெரியாது எனவும், வங்கி அருகே இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று இறக்கிவிட்டு மட்டுமே வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில் ஸ்கிம்மர் வைத்த ஆனந்த்குமார் தலைமறைவாகிவிட்டதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்த வழக்கின் விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதன்பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதன்படி 20 லட்ச ரூபாய் மதிப்புடைய அசையா சொத்துக்கள் குறித்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் உத்தரவாதம் தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்றும், அதன்பின்னர் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் காலை மாலையில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.
[9/27, 17:50] Sekarreporter1: சென்னையில் ரேஸ் பைக் மோதியதில் பலியானவரின் குடும்பத்திற்கு 41 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகளுக்கான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பாலவக்கத்தைச் சேர்ந்த பிளம்பர் வேலை செய்யும் ஜோசப் என்பவர் அவரது நண்பருடன் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதிகாலையில் தனது நண்பருடன் டீக்கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது நீலாங்கரையிலிருந்து திருவான்மியூர் நோக்கி நான்கு பைக்குகளில் இளைஞர்கள் பைக் ரேஸ் சென்றுள்ளனர். அதில் சூளைமேட்டை சேர்ந்த தினேஷ்குமார் ஓட்டி வந்த கேடிஎம் மோட்டார் பைக் மோதி, ஜோசப் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் ஜோசப்பின் மரணத்திற்கு 22 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி அவரது தாய் ஸ்டெல்லாவும், மனைவி சத்தியபிரியாவும் இணைந்து சென்னை மோட்டார் வாகன விபத்துகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி டி. சந்திரசேகரன் முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது பைக் ஓட்டி வந்த தினேஷ் குமாருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்றும், வாகனத்திற்கு காப்பீடு செய்யப்படவில்லை என்றும் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதுயடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஜோசப்பின் மரணத்திற்கு 41 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என பைக் உரிமையாளர் சங்கருக்கும், அதை ஒட்டி வந்த அவரது மகன் தினேஷ் குமாருக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தொகையை இருவரும் இணைந்து மூன்று மாதத்திற்குள் ஜோசப்பின் தாய், மனைவிக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

You may also like...