Madras high court orders january 6

[1/5, 10:52] Sekarreporter 1: வேதா நிலையம் – அதிமுக மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில், நிலம் கையகப்படுத்திய உத்தரவுகளை தனி நீதிபதி ரத்து செய்ததை எதிர்த்து மூன்றாவது நபராக அதிமுக மற்றும் முன்னாள் அமைச்சர்சி.வி.சண்முகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு

நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், சத்திகுமார் சுகுமார குரூப் அமர்வு

– வேதா நிலையம் என்ற தனியார் இடமான கையகப்படுத்தியதில் விதிமீறல் உள்ளது என கூறும் அதிமுக, தனி நீதிபதி முன்பாக விசாரணைக்கு வந்தபோது வழக்கில் இணையவில்லை

– நிலம் கையகப்படுத்துதலில் உள்ள நடைமுறை தவறுகள் இருக்கிறது

– பொது நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படவில்லை. அரசியல் காரணங்களுக்காகவே கையகப்படுத்தப்பட்டுள்ளது

– இரண்டாவது நினைவிடம் என்பது தேவையற்றது என்ற தனி நீதிபதி கருத்தில் தவறில்லை
[1/5, 11:47] Sekarreporter 1: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில் கையகப்படுத்திய உத்தரவுகளை ரத்து செய்ததை எதிர்த்து அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவதற்காக, கையகப்படுத்தி முந்தைய அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி சேஷசாயி, கடந்த நவம்பர் 24ம் தேதி தீர்ப்பளித்திருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், மூன்றாம் நபர் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் சத்திகுமார் சுகுமார குருப் அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், சத்திகுமார் சுகுமார குரூப், நிலம் கையகபடுத்ததப்பட்டதில் நடைமுறை தவறுகள் உள்ளதா, பொதுப் பயன்பாடு உள்ளதா, அப்படி பொதுப் பயன்பாடு இருந்தால் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை மீண்டும் தொடர அரசுக்கு உத்தரவிடமுடியுமா என்ற கேள்விகள் எழும்பியதாக கூறி அவற்றுற்கு தீர்ப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

அதன்படி நிலம் கையகப்படுத்தும் நடைமுறைகளை ஆய்வு செய்ததில் தனியார் சொத்து என்ற முறையில் அதன் உரிமையாளரின் கருத்தை கவனத்தில் கொள்ளாமல், அவர்களின் நிலையை ஏற்றுக்கொள்ளாமல் வேதா நிலையத்தை கையகப்படுத்தியதில் தவறுகள் நடந்துள்ளது என்ற தனி நீதிபதி உத்தரவில் தவறில்லை என நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

நிலம் கையகப்படுத்தப்பட்டதில் பொதுப் பயன்பாடு ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ள நீதிபதிகள், ஆட்சியில் இருந்ததால் தீபா, தீபக் ஆகியோரின் வழக்கை எதிர்கொண்டதாகவும், தற்போதைய அரசு மேல்முறையீடு செய்யாததால் நீதிமன்றதை நாடியதாகவும் அதிமுக கூறுவதை ஏற்கமுடியாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நடைமுறை தவறுகள் உள்ளதாலும், பொதுப் பயன்பாடு இல்லை என்றும், உரிமையாளர் விருப்பத்திற்கு முரணாக கையகப்படுத்தபட்டு உள்ளதாலும், தனி நீதிபதி உத்தரவில் தலையிட அவசியமில்லை என கூறி அதிமுக மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தனி நீதிபதி உத்தரவை ஏற்று வாரிசுதாரர்களிடம் சாவி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்கும்படி அரசுக்கு உத்தரவிடுவது முறையாக இருக்காது என்றும், ஏற்கனவே நினைவிடம் உள்ள நிலையில் இரண்டாவதாக ஒன்றை அமைக்க அரசுக்கு உத்தரவிடுவது சட்டபூர்வமாகவோ இருக்காது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
[1/5, 12:04] Sekarreporter 1: தேசியக்கொடி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் சின்னங்களை களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. அன்பரசு, தேசிய சின்னங்கள் மற்றும் அடையாளங்களை தவறாக பயன்படுத்துவதாகவும், அதை தடுப்பதற்கான சட்டவிதிகளை காவல்துறை பின்பற்றுவதில்லை என சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா என்பவர் தொடர்ந்த 2014ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மறைவிற்கு பின்னர் இந்த வழக்கை மகன் ககன் சந்த் போத்ரா வழக்கை நடத்தி வந்தார். இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்துள்ள சென்னைசென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வரும் தேசியக்கொடி, இலச்சினைகள், பெயர் மற்றும் முத்திரைகள், ஸ்டிக்கர்ஸ் ஆகியவற்றை ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டுமென பத்திரிகை மற்றும் ஊடகங்களில் டிஜிபி விளம்பரம் செய்ய வேண்டும் எனவும் இதனை பின்பற்றாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளார். மேலும் தேசியக்கொடிகள்,சின்னங்களை இலச்சினைகளை பயன்படுத்துபவர்களின் விவரங்களை முறையாக பராமரிக்க டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தவிட்டுள்ள நீதிபதி இந்த உத்தரவை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ள்ளார்.
உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் டிஜிபி உத்தரவிட வேண்டும் எனக்கோரி வழக்கு முடித்து வைத்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்
[1/5, 12:44] Sekarreporter 1: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த புகார் தொடர்பான விசாகா குழு விசாரணை தொடர்பான அறிக்கையை சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி-க்கு அளித்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபிக்கு எதிராக, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்பு சட்டப்படி விசாரணை நடத்த, கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் அடங்கிய விசாகா குழு அமைக்கப்பட்டது.

விசாகா குழு விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், விசாரணை குழுவை மாற்றியமைக்க கோரி உள்துறை செயலருக்கு மனு அளித்து, அது பரிசீலிக்கப்படும் முன்பே விசாரணை துவங்கி விட்டதாகவும், சாட்சிகளின் வாக்குமூலங்களை கூட தனக்கு வழங்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். தற்போதைய விசாகா குழுவை கலைத்துவிட்டு, முறையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, விசாகா குழு விசாரணை அறிக்கையும், முடிவுகளும் மூடி முத்திரையிட்ட உறையில் தமிழக அரசு தாக்கல் செய்தது.

இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விசாகா கமிட்டி விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் சஸ்பெண்ட் செய்யபட்ட சிறப்பு டிஜிபி-க்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

துறை ரீதியான நடவடிக்கை தொடரக்கூடாது என்ற இடைக்கால உத்தரவை நீட்டிக்க கூடாது என அரசு தரப்பிலும், வழக்கு முடியும் வரை நீட்டிக்க வேண்டுமென சஸ்பெண்ட்டான சிறப்பு டிஜிபி தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு குறித்து விசாகா குழு பதில் மனு தாக்கல் செய்யவும், துறை ரீதியான நடவடிக்கையை தொடரக்கூடாது என்ற இடைக்கால உத்தரவை நீட்டித்தும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கினை இறுதி விசாரணைக்காக ஜனவரி 27ஆம் தேதி தள்ளிவைத்துள்ளார்.
[1/5, 17:52] Sekarreporter 1: 2530 பார்களுக்கான டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், 8 மாவட்டங்களில் மட்டுமே பல்வேறு காரணங்களுக்காக டெண்டர் தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும்,
டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில் , தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த டெண்டரை எதிர்த்து பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே பார் வைத்திருந்தவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை என்றும், நில உரிமையாளர்களின் தடையில்லாச் சான்றிதழ் ஏற்கனவே பெற்றுள்ளதால் தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு விசாரித்த உயர் நீதிமன்றம், அனைவருக்கும் டெண்டர் விண்ணப்பங்களை வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி இதுவரை 2530 பார்களுக்கான டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், 8 மாவட்டங்களில் மட்டுமே பல்வேறு காரணங்களுக்காக டெண்டர் தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், கொரோனா ஊரடங்கு காலத்தில் 15 மாதங்கள் பார்கள் நடத்தப்படாததால், உரிமத்தை நீட்டிக்க வேண்டும் எனக் கோரினார். ஏற்கனவே பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக 14 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, முந்தைய கால டெண்டர் படிவத்தையும், தற்போது வெளியிடப்பட்டுள்ள டெண்டர் படிவம் மற்றும் புதிய நிபந்தனைகள் குறித்த அறிவிக்கையையும் தாக்கல் செய்ய அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்குகளின் விசாரணையை நாளை மறுநாளுக்கு தள்ளிவைத்துள்ளார்.

எண்ணூரில் அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலையத்தின் சுற்றுச்சூழல் அனுமதியை நீட்டிப்பது தொடர்பாக நாளை நடைபெறவுள்ள பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுத்துவிட்டது.

சென்னை எர்ணாவூரில் 40 ஆண்டுகளாக இயங்கிவந்த 450 மெகாவாட் அனல்மின் நிலையம் காலாவதியாகி கடந்த 2017ஆம் ஆண்டு மூடப்பட்டது. அதற்கு மாற்றாக, 660 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்க, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், 2009ம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் துறையிடமிருந்து சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்றது.

இந்த அனல் மின்நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், 10 ஆண்டுகளை கடந்துவிட்டதால், சுற்றுச்சூழல் அனுமதியை மேலும் நான்கு ஆண்டுகள் நீட்டிக்கும்படி, மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்ற மத்திய அரசு, கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதிலிருந்து விலக்கு அளித்து புதிய சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியது.

இதை எதிர்த்து ஆர்.எல்.சீனிவாசன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், இரண்டு மாதத்தில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த உத்தரவிட்டது.

அதன்படி, நாளை எண்ணூரில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள வேண்டி உள்ளதாகவும், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த தடைவிதிக்க கோரி சீனிவாசன் மீண்டும் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.சண்முகநாதன், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அனைவரையும் ஒரே நேரத்தில் அனுமதிக்காமல், நூறு நூறு நபர்கள் கொண்ட ஸ்லாட் முறையில் நடத்தலாம் என தெரிவித்தார்.

கருத்து கேட்பு கூட்டத்தை எதிர்த்து பசுமை தீர்ப்பாயத்தை நாட முடியாது எனவும் வாதிடப்பட்டது.

பின்னர் உத்தரவிட்ட பசுமை தீர்ப்பாய அமர்வு, கருத்து கேட்பு கூட்டத்தை நடத்துவதா, தள்ளிவைப்பதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியரும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும்தான் முடிவெடுக்க வேண்டுமெனவும், தீர்ப்பாயம் தலையிட்டு உத்தரவிட முடியாது என கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

You may also like...