Madras high court october 2nd orders ஐகோர்ட் உத்தரவு Link

[10/1, 12:08] Sekarreporter.: முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் அமல்படுத்தாமல் இருப்பது சட்டவிரோதம் என அறிவிக்ககோரி  நளினி தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ஆம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11ஆம் தேதி ஆளுனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த பரிந்துரை மீது ஆளுனர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருக்கபட்டதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். ஆளுநரின் நடவடிக்கை
அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்று தெரிவித்துள்ளார்.தான்  எடுத்துக்கொண்டு உறுதிமொழிக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மீறி கவர்னர் செயல்படுவதாகவும் நளினி தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மாருராம் என்பவரது,  வழக்கில் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிராக செயல்படுவதாகவும், எனவே அமைச்சரவையின் முடிவை ஆளுநர் செயல்படுத்தாமல் இருப்பது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டிருந்தால் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது .வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தசரா விடுமுறைக்கு பின் ஒத்திவைத்துள்ளனர்.
[10/1, 12:08] Sekarreporter.: தமிழகத்தில் நீர்நிலைகளில் மூழ்கி
உயிரிழப்பதை தடுக்க  நீர்நிலைகளில் கண்காணிப்பு கோபுரங்கள்,கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள சாத்திய கூறுகள் உள்ளதா ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

தமிழகத்தில் நீர்நிலைகளில் மூழ்கி
உயிரிழப்பதை தடுக்க   கடற்கரைகள், அபாயகரமான குளங்கள் மற்றும்
அருவிகள் உள்ளிட்ட  நீர்நிலைகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க
வேண்டும் ,24 மணி நேரமும் நீச்சலில் நிபுணத்துவம்
பெற்ற பாதுகாப்பு குழுவை பணியமர்த்த வேண்டும், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோட்டீஸ்வரி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரரின் பரிந்துரைகளை செயல்படுத்துவது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் இது குறித்து பதில் அளிக்க அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது..

இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கைகளை அமல்படுத்துவது அரசின் கொள்கை முடிவு என தெரிவித்த நீதிபதிகள்,இவற்றை செயல்படுத்த சாத்திய கூறுகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 22 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[10/1, 13:18] Sekarreporter.: ஒன்பது மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் மத்திய அரசு பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களா நியமிக்க வேண்டும், மத்திய போலீஸ் படையினரை பாதுகாப்புக்கு அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த மனுவை பரிசீலிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக தேர்தல் பிரிவு துணை செயலாளர் இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மாவட்டங்களில் 20 சதவீத வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா மற்றும் இணையதள நேரலை வசதி ஏற்படுத்தப்படும். ஸ்டிராங்க் ரூம், வாக்கு எண்ணிக்கை மையங்கள் அடையாளம் காணப்பட்டு பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். சிக்கலான, பதட்டமான வாக்குச்சாவடிகளில் மட்டும் வீடியோ பதிவு செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், மாவட்டத்தில் 20 சதவீத வாக்குச்சாவடிகள் மட்டுமல்லாமல் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் இணையதள நேரலை வசதி செய்ய வேண்டும் எனவும், வாக்கு எண்ணிக்கை மையங்கள், ஸ்டிராங்க் ரூம்கள் குறித்த விவரங்களை அரசியல் கட்சிகளுக்கு வழங்க வேண்டும் எனவும், வாக்குச்சாவடிகளில் தொடர்ந்து வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும், ஸ்ட்ராங் ரூம்களுக்கு உள்ளேயும் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும் எனவும் தேர்தல் பார்வையாளர்களின் விபரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், ரகசியமாக செயல்படக் கூடிய தேர்தல் பார்வையாளர்களை அடையாளப்படுத்த முடியாது எனவும், வாக்கு எண்ணிக்கை மையத்திலும், ஸ்ட்ராங்க் ரூம்களுக்கு வெளியே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதால், உள்ளே தேவையில்லை எனவும், முடிந்த அளவு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, அதிமுகவின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுப்பதாக அரசுத்தரப்பில் ஒப்புதல் தெரிவித்ததை பதிவு செய்த நீதிபதிகள், இதே நடைமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

எந்த புகாருக்கு இடம் தராத வகையில் அதிகாரிகள் நியாயமான தேர்தல் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
[10/1, 14:28] Sekarreporter.: பழங்குடியின மக்களுக்கும் மற்ற சாதியினரை போல ஆன்லைன் வாயிலாக சாதி சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

தேவையற்ற காலதாமதத்தை தவிர்க்கும் நோக்கில், சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ்,வருமான வரித்துறை சான்றிதழ்,முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்டவற்றை மின்னணு முறையில் வழங்க அரசு கொள்கை முடிவு எடுத்ததன் அடிப்படையில் வருவாய் துறை
சார்பில் கடந்த 2010ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது

பழங்குடியின மக்கள் சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் போது, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்,தாசில்தார் ஆகியோரின் ஒப்புதல் மற்றும் கருத்துகளை கேட்டறிந்து ஆன்லைன் வாயிலாகவே டிஜிட்டல் கையெழுத்துடன் கூடிய சான்றிதழ் வழங்க வருவாய் கோட்டாட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் கடந்த 2015 ம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை செயலாளராக இருந்த அண்ணாமலை ஐ.ஏ.எஸ், தகுதியற்ற நபர்கள் முறைகேடாக பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்குவதை தடுக்க வேண்டும் என தெரிவித்து, இனி பழங்குடியின மக்களுக்கு ஆன்லைன் வாயிலாக சாதி சான்றிதழ் வழங்கக்கூடாதென
அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களுக்கும் தனிப்பட்ட முறையில் கடிதம் ஒன்றை எழுதினார்

இதன் காரணமாக ஆன்லைன் வாயிலாக பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்குவது நிறுத்தப்பட்ட நிலையில் அதனை எதிர்த்தும், மற்ற சாதியினருக்கு வழங்கப்படுவது போல பழங்குடியின மக்களுக்கும் ஆன்லைன் வாயிலாக சாதி சான்றிதழ் வழங்க கோரியும் ஆதி பழங்குடி நல சங்கத்தின் பொது செயலாளர் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்

இந்த வழக்கு நீதிபதி கல்யாணசுந்தரம் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துரைசாமி மற்றும் இளங்கோவன் ஆகியோர், பழங்குடியினருக்கான சாதிச்சான்று உரிய நேரத்தில் வழங்காமல் ஆண்டு கணக்கில் கால தாமதம் செய்யப்படுவதால், மாணவர்களின் படிப்பும் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுவதாகவும்,
விசாரணை,சரிபார்ப்பு என்ற பெயரில் இழுத்தடிக்க படுவதாகவும், ஆன்லைன் வாயிலாக சான்றிதழ் வழங்கினால் காலதாமதம் தவிர்க்கப்படும் என்றும் எடுத்துரைத்தனர்

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிற்படுத்தப்பட்டோர்,
மிகவும் பிறப்பிடுத்தப்பட்டோர்,
பட்டியலினத்தவர்களை போல இனி பழங்குடியினருக்கும் சாதி சான்றிதழ்களை மின்னணு முறையில் வழங்கப்பட உள்ளதாகவும்,
விண்ணப்பிப்பவர்களும் ஆன்லைன் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டுமெனவும், இது தொடர்பாக வருவாய்த் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி சார்பில் கடந்த 3 ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறி அதன் நகலை தாக்கல் செய்தார்

அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்
[10/1, 15:29] Sekarreporter.: நீதிபதியை பணி செய்யவிடாமல் 25 நிமிடம் தடுத்து வைத்த காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு அளிக்கும் அதே மரியாதையை நீதிபதிகளுக்கும் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சிவாஜிகணேஷனின் 96 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை அடையாறு டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில் உள்ள அவரின் மணி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இதற்காக சாலைகளில் இரும்பு தடுப்புகளை அமைத்து சாலைகளில் காவல்துறையினர் போக்குவரத்தை நிறுத்தி வைத்தனர்.

இதனால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலையில் பணிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

இதை போன்று அந்த சாலை வழியாக உயர்நீதிமன்றம் வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வாகனத்தையும் காவல்துறையினர் தடுத்துள்ளனர்.

இதனால் உயர்நீதிமன்றத்திற்கு 25 நிமிடம் தாமதமாக வந்ததால் தனது பணி பாதிக்கப்பட்டுள்ளதால் இது குறித்து உள்துறை செயலாளர் ஆஜாரகி விளக்கம் அளிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடடேஷ் உத்தரவிட்டார்.

அதன்படி காணொலி காட்சி மூலம் பிற்பகல் ஆஜாரான உள்துறை செயலாளர் பிரபாகரிடம் எதனடிப்படையில் 25 நிமிடங்கள் தடுத்து நிறுத்தினீர்கள்? பொது ஊழியரான நீதிபதியான என்னை பணி செய்ய விடாமல் தடுத்தது நீதிமன்ற அவமதிப்பு என
நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

நடைபெற்ற நிகழ்விற்கு வருத்தம் தெரிவித்த உள்துறை செயலாளர்
சென்னை மாநகர காவல் ஆணையரை நேரில் வரவழைத்து இந்த நிகழ்விற்கு விளக்கம் கேட்டுள்ளதாகவும்,
எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வு நடைபெறாது என உறுதியளித்தார்.

அப்போது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நிகழ்ச்சிக்கு போகும் போது இதுபோல் காவல்துறையினர் தடுத்து நிறுத்துவார்களா? என கேள்வி எழுப்பினார். மேலும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அதே மரியாதையை நீதிபதிகளுக்கும் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த நிகழ்வு நீதிமன்ற அவமதிப்பாக இருந்தாலும் எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காது என்று நம்புவதாக நினைத்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.
[10/1, 15:50] Sekarreporter.: உள்ளாட்சித் தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக சட்டத்தை மீறி நடத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்துக்களுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் பட்டியல் இனத்தவருக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கும் வார்டுகள் ஒதுக்கீட்டில் குளறுபடிகள் உள்ளதாக கூறி முத்தியால்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகேஷ் குமார் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ பேனர்ஜி நீதிபதி அதகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வார்டு ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.

இதற்கு புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், இது தொடர்பாக வரும் திங்கள்கிழமை விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், முதல்கட்ட தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய 7ம் தேதி வரை கால அவகாசம் உள்ளதால் அதில் தலையிடவில்லை என தெரிவித்தனர். மேலும் உள்ளாட்சி தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக சட்டத்தை மீற முடியாது என கருத்து தெரிவித்து வழக்கை வரும் திங்கள் கிழமைக்கு தள்ளிவைத்தனர்.
[10/1, 16:41] Sekarreporter.: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியதாக வைகோ மற்றும் திருமாவளவன் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, கடந்த 2016ம் ஆண்டு எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையானது சென்னை எம்.பி.மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் தங்கள் மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி வைகோ மற்றும் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் மீது பதியபட்ட வழக்கில் எந்த முகாந்திரம் இல்லை எனக்கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
[10/1, 16:41] Sekarreporter.: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வி.கே. சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி மறுத்து நீலகிரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நான்கு வாரத்திற்கு தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரை கொலை செய்து,
பொருள்கள், ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக நீலகிரி மாவட்டம் ஷோலூர்மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக, நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வி.கே.சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் சங்கர், மாவட்ட முன்னாள் எஸ்.பி முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், மற்றும் சுனில் ஆகியோரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரல் மாதம் (2021) உத்தரவிட்டது.

நீலகிரி நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதில், இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தொடர்பு குறித்து சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தை பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின் நடந்த கொள்ளையில், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்கு தான் தெரியும் எனவும், புலன் விசாரணை குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும் முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோரை நீதிமன்றத்தில் அழைத்து விசாரிக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கபட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய நான்கு வார கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை நவம்பர் 12 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

You may also like...