Madras high court nov 25 order

[11/25, 10:27] Sekarreporter 1: மன்னிப்பு கோரியது ஐகோர்ட்

பாகப்பிரிவினை வழக்கின் குறுக்கு விசாரணையின் போது, பெண் மனுதாரரிடம், பண்பற்ற முறையில் வழக்கறிஞர் ஒருவர் கேள்வி எழுப்பிய விவகாரம்

மேல்முறையீட்டு மனு தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்ற மன்னிப்பு கோரியது

தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில், பாகப்பிரிவினை தொடர்பான வழக்கில், குறுக்கு விசாரணையின் போது, இரண்டாவது மனைவியின் மகன் தரப்பு வழக்கறிஞர், மூன்று பெண்களின் தந்தை மீதான உரிமை குறித்தும், அவர்களின் தாயை அவமதிக்கும் வகையில் கேள்வி

நீதிமன்றத்திலேயே இந்த விவகாரம் நடைபெற்றுள்ளதால், அதற்காக உயர் நீதிமன்றம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது : நீதிபதி பரத சக்கரவர்த்தி

மனுதாரர்களை அவமானப்படுத்துவதற்காகவோ, அவர்களுக்கு காயத்தை ஏற்படுத்துவதற்காகவோ குறுக்கு விசாரணை இல்லை : நீதிபதி பரத சக்கரவர்த்தி

தங்களது உரிமைகளுக்காக நீதிமன்றத்தை நாடும் பெண்களின் நடத்தையை படுகொலை செய்யும் வகையில் கேள்விகள் இருக்கக்கூடாது : நீதிபதி அறிவுறுத்தல்
[11/25, 11:26] Sekarreporter 1: 24 மணி நேரத்தில் மத்திய தேர்தல் ஆணையரை நியமிக்கும் மத்திய அரசு , பத்து மாதங்கள் ஆகியும் ஏன் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவரை நியமிக்க முடியவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

பாமக செய்திதொடர்பாளரும்,வழக்கறிஞர சமூக நீதி பேரவை தலைவருமான கே.பாலு தாக்கல் செய்துள்ள மனுவில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதியுடன் காலாவதியாகி விட்டதாக தெரிவித்துள்ளார்.

கடந்த பல மாதங்களாக தேசிய ஆணையத்துக்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் காலியாக உள்ளதால் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் சட்ட அந்தஸ்து பெற்றுள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு , ஆணையத்தில் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப வேண்டும் எனத் தெரிவித்து, மனுவுக்கு ஆறு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்த து.வழக்கு நிலுவையில் இருந்த நிலையில்,
நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி கிருஷ்ணன்ராமசாமி முன்பு ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு,இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் , கால அவகாசம் வழங்காமல், மத்திய அரசு உடனடியாக நியமிக்க உத்தரவிடவேண்டும்,24 மணி நேரத்தில் இந்திய தேர்தல் ஆணையரை நியமிக்க முடிந்த மத்திய அரசால், பத்துமாதங்கள் ஆகியும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் உள்ளிட்ட பதவிகளை ஏன் நியமனசெய்யமுடியவில்லை என கேள்வி எழுப்பினார்.மத்திய அரசு சார்பில், நியமன நடைமுறைகள் தொடங்கியுள்ளதாகவும், ஒரு மாதத்திற்குள் நடைமுறைகள் முடிக்கப்படும் என்று பதிலளிக்கப்பட்டது.இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அடுத்தமாதம் ஏழாம் தேதி ஒத்திவைத்தனர்.
[11/25, 11:43] Sekarreporter 1: பிற்படுத்தப்பட்டவர்களுக்காக சுயநலமற்று பணியாற்றவர்களை கண்டறிவது, சமூக அரசியல் ரீதியாக அவர்களின் பணி உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு தான் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவரை நியமிக்க முடியும் என்றும், நியமனங்களை மேற்கொள்ள காலக்கெடு ஏதும் வகுக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாமக செய்திதொடர்பாளரும்,வழக்கறிஞர சமூக நீதி பேரவை தலைவருமான கே.பாலு தாக்கல் செய்துள்ள மனுவில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதியுடன் காலாவதியாகி விட்டதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 9 மாதங்களாக தேசிய ஆணையத்துக்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் காலியாக உள்ளதால் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சட்ட அந்தஸ்து பெற்றுள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை சார்பு செயலாளர் என் எஸ் வெங்கடேஸ்வரன் என்பவரின் பதில் மனு தாக்கல் செய்ய்ப்பட்டது. அதில் ஆணைய உறுப்பினர்களின் பதவிக்காலம் மட்டும்தான் வரையறுக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களின் பதவி காலம் முடிந்த பிறகு அடுத்ததாக நியமிக்கப்பட வேண்டியவர்களை தேர்ந்தெடுப்பதற்கு எவ்வித காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ள்து. பிற்டுத்தப்பட்டவர்களின் நலனுக்காக சுயபலமற்று பணியாற்றவர்களை கண்டறிவது, சமூக அரசியல் ரீதியாக அவர்களின் பணி உள்ளிட்ட கருத்தில் கொண்டு தான் ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்டோரை நியமிக்க முடியும் என்றும், எவ்வளவு குறிப்பிட்ட காலத்திற்குள் நியமிக்க முடியும் என்று வரையறுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணைய உறுப்பினர்களை நியமிப்பதற்கான பணிகள் தொடங்கி இருப்பதாகவும் விரைவில் நிறைவடையும் என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது மனுதாரரான வழக்கறிஞர் கே.பாலு குறுக்கிட்டு, 24 மணி நேரத்தில் இந்திய தேர்தல் ஆணையரை நியமிக்க முடிந்த மத்திய அரசால், பத்துமாதங்கள் ஆகியும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் உள்ளிட்ட பதவிகளை ஏன் நியமன செய்ய முடியவில்லை என கேள்வி எழுப்பியதுடன், ஆணைய காலியிடங்களை மத்திய அரசு உடனடியாக நியமிக்க உத்தரவிடவேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 7ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
[11/25, 11:43] Sekarreporter 1: அரசு பணி நியமனங்களின் போது தேர்வு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் அதனை மீறுவது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும் எச்சரித்துள்ளது.

புதுவை பொதுப்பணித்துறையில் 10 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக, முறையற்ற பணியமர்த்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறி,  பட்டதாரி இளைஞர் அய்யாசாமி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புதுவை  பொதுப்பணி துறையில்  எத்தனை பேர் சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களை தாக்கல் செய்ய அம்மாநில பொதுப்பணித்துறை செயலாளருக்கு  உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, 2016ம் ஆண்டு முதல் இதுவரையில் எந்த நியமனங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், அரசுப் பணி நியமனங்கள் முழுக்க முழுக்க விதிகளை பின்பற்றியே மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் அளித்து புதுச்சேரி அரசுத்தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், அரசு பணியில் எந்த சூழ்நிலையிலும் முறைக்கேட்டை அனுமதிக்க முடியாது எனவும்
அரசியல் சட்ட விதிகளை பின்பற்றியே அனைத்து நியமனங்களும் மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

தற்காலிக நியமனங்களிலும் அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்து, விதிகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, இதில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் அதற்கு அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் என கூறியுள்ளார்.

பணி நியமனங்கள் தொடர்பாக புதுச்சேரி அரசின் உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், அனைத்து நியமனங்களும் போட்டித்தேர்வு அல்லது வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமே மேற்கொள்ள வேண்டும் எனவும், தேர்வு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

தேர்வு நடைமுறைகள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் எனவும் அவ்வாறு இல்லையென்றால் அது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும் எச்சரித்துள்ளார்.
[11/25, 12:29] Sekarreporter 1: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை ஒரு முறை பயன்படுத்தும் பாஸ்வேர்டு மூலம் மின்னணு முறையில் நடத்தக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு, மருத்துவ கவுன்சில், தேசிய மருத்துவ ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 19ம் தேதி தபால் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் இத்தேர்தலை ஒரு முறை பயன்படுத்தும் பாஸ்வேர்டு மூலம் மின்னணு முறையில் நடத்த உத்தரவிடக் கோரி க்சஞ்சிபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் கார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், சுதந்திரத்துக்கு முன்பிருந்தே பின்பற்றப்பட்டு வந்த தபால் வாக்கு நடைமுறையை, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகும் பின்பற்ற எந்த காரணமும் இல்லை என்றும், தபால் வாக்கு என்பது முறைகேடுகளுக்கு வழி வகுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2020ம் ஆண்டு மின்னணு பதிவு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், ஒரு முறை மட்டும் பாஸ்வேர்டு மூலம் மின்னணு முறையில் வாக்குப்பதிவு செய்யும் நடைமுறையை கொண்டு வர முடியும் எனவும், இதன் மூலம் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த முடியும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், தமிழக அரசு, மருத்துவ கவுன்சில், தேசிய மருத்துவ ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டார். மருத்துவ கவுன்சில் தேர்தல் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்து, இந்த வழக்கின் விசாரணையையும் டிசம்பர் 5 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[11/25, 13:23] Sekarreporter 1: அனுமதி பெறாத தளங்களிலும் மின்சாரத்தை பயன்படுத்தி வரும் போத்தீஸ், சரவணா ஸ்டோர்ஸ், என்.ஏ.சி. நிறுவனங்களுக்கு எதிராக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எடுக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை தி.நகரில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடை, சரவணா ஸ்டோர்ஸ், என்.ஏ.சி. ஜுவல்லரி உள்ளிட்ட நிறுவனங்கள் மின் பயன்பாட்டிற்கு அனுமதி பெற்ற கட்டிட தளங்களையும் மீறி, அனுமதி பெறாத தளங்களிலும் மின்சாரத்தை பயன்படுத்தி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நோட்டீசுகளை எதிர்த்து அந்த நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. அந்த வழக்குகளில், அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்திற்குள் தான் மின்சாரத்தை பயன்படுத்தி வருவதால், நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தன.

இந்த வழக்குகளின் விசாரணை நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணை வந்தது . அப்போது மின் பகிர்மான கழகம் சார்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் அஜராகி, மின் இணைப்பு பெறும்போது வழங்கப்பட்ட மின் இணைப்பு வரைபட திட்டத்தையும் மீறி, அங்கீகரிக்கபடாத தளங்களிலும் மின் இணைப்பை பயன்படுத்திவருகின்றனர் என்றும், அதனடிப்படையில் எடுக்கப்படும் மேல் நடவடிக்கைக்கு தடை விதிக்க கூடாது என்றும் வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி சதீஷ்குமார் மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
[11/25, 14:58] Sekarreporter 1: சென்னை அண்ணா மேம்பாலம் அருகே தோட்டக்கலை சங்கம் பெயரில் உள்ள,
1000 கோடி மதிப்புள்ள 110 கிரவுண்ட் நிலத்தை அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை அண்ணா மேம்பாலத்தை ஒட்டியுள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தில் ‘தோட்டக்கலைச் சங்கம்’ என்ற ஒரு அமைப்பின் பெயரில் தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி என்ற அ.தி.மு.க. பிரமுகரால் சுயலாபத்திற்கு பயன்படுத்துவதாக கடந்த 1989 ம் ஆண்டே திமுக அரசு நடவடிக்கை எடுத்தது.

இந்த நடவடிக்கைக்கு எதிராகத் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி தாக்கல் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வில்லங்கம் சரி பார்த்ததில் இந்த நிலம் அரசுக்குச் சொந்தமானதென்றே உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலம் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியின் சங்கத்திற்கு சொந்தமானதென முடிவு செய்ய, எவ்வித அடிப்படை முகாந்திரமும் இல்லை என்று உத்தரவிட்டது.பின்னர், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, டிரைவ் இன் உட்லண்ட்ஸ் அமைந்திருந்த 20 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி, தோட்டக்கலை துறை சார்பில் செம்மொழி பூங்கா அமைத்தது. எதிர்ப்புறம் இருந்த 6.36 ஏக்கர் நிலத்தில் இருந்த தோட்டக்கலை சங்கத்தை காலி செய்ய நடவடிக்கை எடுத்தது.

இதை எதிர்த்து தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த சென்னை வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணை நடத்திய சென்னை மாவட்ட ஆட்சியர் தற்போது அலுவலகம் வைத்துள்ள நிலம் சங்கத்திற்கே சொந்தமானது உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் நில நிர்வாகத்துறை முதன்மை செயலாளர், தானாக முன்வந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவை நிறுத்திவைத்து, ஏன் மாவட்ட ஆட்சியர் உத்தரவை ரத்து செய்யக்கூடாது என நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்த நோட்டீசை எதிர்த்து தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி சதீஷ்குமார் முன்பு நடைபெற்றது .அப்போது இந்த வழக்கில் பிரதிவாதியாக உள்ள வழக்கறிஞர் புவனேஷ்குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், கடந்த அதிமுக ஆட்சியில் முடிவெடுக்க அதிகாரமில்லாத மாவட்ட ஆட்சியர் சுமார் 1000 கோடி மதிப்புள்ள 110 கிரவுண்ட் நிலத்தை தங்க தட்டில் வைத்து கொடுப்பது போல் கொடுத்துள்ளார்.நில நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் சரியான நேரத்தில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அந்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளார் என்று வாதிட்டார்.
அரசு சார்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி,
முதன்மை செயலாளரின் நோட்டீசுக்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும், தோட்டக்கலைத்துறை சங்கத்திற்கு இந்த சொத்தை வைத்திருக்க எந்த உரிமையும் இல்லை என்று வாதிட்டார்.இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி,தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
[11/25, 16:27] Sekarreporter 1: சிலை கடத்தல் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட காரணத்திற்காக, கடத்தபட்டு மீட்கப்பட்ட சிலைகளுக்கு உரிமை கோரக்கூடாது என விடுதலை செய்யப்பட்டவர்களை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சென்னை அடையாறில் வீட்டின் கார் ஷெட்டில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக 1994ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் 24 கற்சிலைகள்,10 கல் பீடங்கள், 5 பாவை விளக்குகள் மற்றும் ஒரு மரப்பெட்டி என 40 பொருட்களை கைபற்றப்பற்றப்பட்டன. அந்த வழக்கில் சி.கே.மோகன், ரிக்கி லம்பா, சௌந்தரபாண்டியன், கந்தசாமி உள்ளிட்ட 35 பேர் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

இதுதொடர்பாக 1998ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம், குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை, சாட்சியங்கள் முறையாக இல்லை, சிலைகள் பழங்கால பொருட்கள் என நிரூபிக்கவில்லை போன்ற காரணங்களை கூறி, அனைவரையும் விடுதலை செய்து 2012ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பை எதிர்த்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தி மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், சாட்சியங்களை முறையாக விசாரிக்கவில்லை என்றும், கோவில் நிர்வாகத்தால் உடனடியாக புகார் அளிக்கப்படவில்லை என்பதற்காக திருடியவர்களை தப்பிக்க விடக் கூடாது என்றும், வழக்கு தொடர்புடைய 40 பொருட்களில் 31 அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்டு, அவை பழமையான சிலைகள் மற்றும் பொருட்கள் என இந்திய தொல்லியல் துறை ஆய்விற்கு பின் உறுதிசெய்யப்பட்டுள்ளதை கருத்தில் கொள்ளாமல் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆர்.கிஷோர்குமார் ஆஜராகி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளித்த தகவல் மூலமாக 91 சிலைகள் பல்வேறு நாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாகவும், இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நீதிமன்றம் மேம்போக்காக விசாரித்து அனைவரையும் விடுதலை செய்துள்ளதாக வாதிட்டார்.

இந்திய தொல்லியல் துறை அளித்த சான்றிதழையே நிராகரித்துவிட்டு தவறான நோக்கில் விடுதலை செய்துள்ளதால் அவர்கள் விடுதலை செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும், குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் தண்டிக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அனைவரும் கும்பலாக சேர்ந்து சிலை கடத்தலில் ஈடுபட்டார்கள் என்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நிருபிக்க தவறிய காரணத்தினால் தான் தாங்கள் விடுதலை செய்யப்பட்டு இருப்பதாகவும், சிலை கடத்த தடுப்பு பிரிவு மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டனர்.

இதன் பின்னர் நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில், இந்திய தொல்லியல் துறை அளித்த சான்றுகளை எழும்பூர் நீதிமன்றம் முறையாக ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்ததாக சுட்டிக்காட்டியுள்ளார். 1994ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் நீண்ட கால விசாரணை, நீதிமன்றங்களில் நீண்ட கால விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில் எழும்பூர் நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்ய அவசியமில்லை என குறிப்பிட்டுள்ளார். மீட்கபட்ட சிலைகள் அனைத்தும் கோவில்களிலிருந்துதான் மீட்கபட்டது என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கத் தவறியதன் அதனடிப்படையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

கற்சிலைகள் புராதன பொருட்கள் திருட்டு குறித்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை சிறப்பாக நடத்தப்பட்டபோதும் வழக்கு விசாரணை இழுத்தடிக்கப்பட்டதன் காரணமாக குற்றம் சந்தேகத்தின் பலனை சாதகமாக கொண்டு விடுவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி, மீட்கப்பட்டவை அனைத்தும் தமிழக கோவில்களில் இருந்து தான் திருடப்பட்டது என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வழக்கில் இருந்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள் என்ற காரணத்திற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவால் மீட்கப்பட்ட பொருட்களுக்கு அவர்கள் உரிமை கோர முடியாது என தெளிவுபடுத்தி உள்ளார்.

மீட்கப்பட்ட சிலைகள் மற்றும் பொருட்களை சம்பந்தப்பட்ட கோவில் அல்லது அரசு அருங்காட்சியகங்களின் பாதுகாக்க வேண்டும் என்றும், அவற்றிற்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் உரிமை கோர முயற்சித்தால், இந்த வழக்கை எழும்பூர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
[11/25, 16:43] Sekarreporter 1: சென்னை அண்ணா மேம்பாலம் அருகே 110 கிரவுண்ட் நிலத்தை அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்த தோட்டக்கலை சங்கத்தின் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை அண்ணா மேம்பாலத்தை ஒட்டி கதிட்ரல் சாலையில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் அதிமுக பிரமுகரான தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி ‘தோட்டக்கலைச் சங்கம்’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கி பயன்படுத்தி வந்தார்.

இதை மீட்க் கடந்த 1989ஆம் ஆண்டு அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிராகத் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி தாக்கல் வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 100 ஆண்டுகளுக்கும் மேலாக வில்லங்க சான்றை சரிபார்த்ததில் அந்த நிலம் அரசுக்குச் சொந்தமானது என உறுதி செய்தது. பின்னர், அங்கு அமைந்திருந்த டிரைவ் இன் உணவு விடுதி அனுபவித்த 20 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, தோட்டக்கலை துறை சார்பில் செம்மொழி பூங்கா அமைத்தது.

அந்த நிலத்திற்கு எதிரில் 6.36 ஏக்கர் நிலத்தில் இருந்த தோட்டக்கலை சங்கத்தை காலி செய்ய அரசு நடவடிக்கையை எதிர்த்து தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணை நடத்திய சென்னை மாவட்ட ஆட்சியர், அந்த நிலம் சங்கத்திற்கே சொந்தமானது உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் நில நிர்வாகத்துறை முதன்மை செயலாளர், தானாக முன்வந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவை நிறுத்திவைத்து, ஏன் மாவட்ட ஆட்சியர் உத்தரவை ரத்து செய்யக்கூடாது என தோட்டக்கலை சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்த நோட்டீசை எதிர்த்து தோட்டக்கலை சங்கம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி சதீஷ்குமார் முன்பு நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் பிரதிவாதியாக உள்ள வழக்கறிஞர் புவனேஷ்குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், கடந்த அதிமுக ஆட்சியில் முடிவெடுக்கும் அதிகாரமில்லாத மாவட்ட ஆட்சியர் சுமார் 1000 கோடி மதிப்புள்ள 110 கிரவுண்ட் நிலத்தை சங்கத்திற்கு வழங்கியதாகவும், நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் சரியான நேரத்தில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அந்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளார் என்று வாதிட்டார்.

தமிழக அரசு சார்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, முதன்மை செயலாளரின் நோட்டீசுக்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும், தோட்டக்கலைத்துறை சங்கத்திற்கு இந்த சொத்தை வைத்திருக்க எந்த உரிமையும் இல்லை என்று வாதிட்டார்.

இதையடுத்து தீர்ப்பளித்த நீதிபதி, அரசு நிலத்திற்கு உரிமை கோரிய தோட்டக்கலை சங்கத்தின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
[11/25, 17:01] Sekarreporter 1: கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகத்திற்கு எதிராக கோவிலுக்குள் போராட்டம் நடத்த வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் முறையாக நிர்வகிக்கப்படவில்லை என (தினமலர்) நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி தொடர்பாக சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் இந்து சமய அறநிலையத் துறைக்கு எதிராக கபாலீஸ்வரர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி நாளான ஆகஸ்ட் 31ஆம் தேதி மக்கள் ஒன்று கூட வேண்டும் என்று சமுக வளைதளத்தில் செய்தி பரப்பியதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கோவில் நிர்வாகத்திற்கு எதிராக கபாலீஸ்வரர் கோவில் உள்ளே ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டதால், பக்கதர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதால், கோவிலுக்குள் செல்ல முடியாமல் வெளியே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இதுதொடர்பாக கோவில் செயல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், சென்னை சேர்ந்த இண்டிக் கலெக்டிவ் அமைப்பின் நிர்வாகி டி.ஆர்.ரமேஷ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், அனுமதியின்றி கூட்டம் நடத்துதல், அவதூறு செய்தி பரப்புதல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டது.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி INDIC COLLECTIVE அமைப்பின் நிர்வாகி டி.ஆர்.ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் கோவிலில் நடைபெற்ற போராட்டத்தின்போது, குடும்ப திருமண நிகழ்வுக்காக பெங்களூரு சென்றிருந்ததாகவும், சம்பவ இடத்தில் இல்லாத தன் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகத்திற்கு எதிராக போராட வேண்டும் என்று மக்களை தூண்டும் வகையில் டி ஆர் ரமேஷ், அவரின் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளதை நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவர் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றாலும் இந்த போராட்டத்தை தூண்டும் வகையில் மூலாதாரமாக செயல்பட்டு இருப்பதால் வழக்கை ரத்து செய்யக் கூடாது என தெரிவித்தார்.

இதை பதிவு செய்த கொண்ட நீதிபதி வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க மறுத்தததுடன், வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்
[11/25, 17:10] Sekarreporter 1: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில், பள்ளி கட்டிடம் புலன் விசாரணைக்கு தேவைப்படுகிறதா என விளக்கமளிக்க சிபிசிஐடி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை கண்டித்து கடந்த ஜூலை 17ம் தேதி நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பள்ளியில் உள்ள பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து, பள்ளி மூடப்பட்டது.

தற்போது பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதால், பள்ளியை மீண்டும் திறக்க அனுமதிக்கும்படி உத்தரவிடக் கோரி பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த பள்ளியை மீண்டும் திறப்பதற்கு அனுமதிக்கலாமா என்பது குறித்து தெரிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நீதிமன்ற உத்தரவின்படி செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, மாணவி மரணம் குறித்த புலன் விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை என்பதால் சம்பந்தப்பட்ட ஏ பிளாக் கட்டிடம் விசாரணைக்கு தேவைப்படலாம் எனத் தெரிவித்தார்.

அதற்கு பள்ளி நிர்வாகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முழு வளாகமும் சீரமைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

மகளிர் ஆணையம் விசாரித்து அளித்த அறிக்கையில், புலன் விசாரணையில் குறைபாடுகள் இருப்பதால், முழுமையாக விசாரணை முடியும் வரை பள்ளியை திறக்க அனுமதிக்க கூடாது என மாணவியின் தந்தை தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு தெரிவித்தார்.

இதையடுத்து, சிபிசிஐடி-யை தாமாக முன் வந்து எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதி சுரேஷ்குமார், குறிப்பிட்ட அந்த கட்டிடம் புலன் விசாரணைக்கு தேவைப்படுகிறதா என்பது குறித்தும், புலன் விசாரணை எப்போது முடித்து, குற்றப்பத்திரிகை எப்போது தாக்கல் செய்யப்படும் என அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like...